தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து வாட்ஸ் அப் யூசர்கள் பெரும்பாலானோர் சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு மாறினர்.
இதனால் கடும் சரிவை சந்தித்த வாட்ஸ் அப் நிறுவனம், தங்களது தனியுரிமை கொள்கையில் மாற்றமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும், வாட்ஸ்அப்-ஐ அப்டேட் செய்யாதவர்களுக்கு பல்வேறு புதிய சேவைகளை பயன்படுத்தும் வசதியை கொடுப்பதில்லை.
வாட்ஸ் நிறுவனத்தின் இந்த பிடிவாதத்தால், அதிருப்தியில் இருக்கும் யூசர்கள், சிக்னல், டெலிகிராம் செயலிகளை அதிகளவு உபயோகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த இரண்டு செயலிகளும் தங்களது யூசர்களை தக்கவைக்கவும், புதிய யூசர்களை இழுக்கவும் புதிய புதிய அப்டேட்டுகளையும் கொடுத்து வருகின்றன.
ALSO READ | உங்கள் சிம் ஒருமணி நேரத்தில் ப்ளாக் ஆகிவிடும்: மோசடி கும்பலின் புது ரூட் - இதை கண்டிப்பாக செய்யாதீர்கள்
அந்தவகையில் டெலிகிராம் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஆயிரம் யூசர்கள் வரை ஒரே நேரத்தில் வீடியோ காலில் பங்கேற்க முடியும். 30 பேர் வரை தங்களது செல்போன் கேமராவில் இருந்து பிராட்காஸ்ட் செய்யும் வசதியைக் கொடுத்துள்ளது.
கொரோனா காரணமாக வீட்டில் இருந்து ஆன்லைன் வொர்க் மற்றும் ஆன்லைன் படிப்புகளை மேற்கொண்டு வருவதால், அவர்களுக்கு இருக்கும் சிரமங்களை குறைக்கும் விதமாக இந்த அப்டேட்டை டெலிகிராம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அளவை மேலும் அதிகப்படுத்துவதற்கான பணிகளிலும் ஈடுபட்டிருப்பதாகவும் டெலிகிராம் நிறுவனம் கூறியுள்ளது. வீடியோக்களை 0.5 செகண்ட் முதல் 2X வரை பாஸ்ட் ஃபார்வேர்டு செய்யும் அம்சத்தையும் டெலிகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தரமான படங்களை பார்த்துக் கொண்டிருந்தால், அதனை நண்பர்களுடன் ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதியை கொடுத்துள்ள டெலிகிராம், சவுண்டையும் ஷேர் செய்து கொள்ளலாம். புதிய சேவைகள் அனைத்தையும் நியூ வெர்சன் டெலிகிராமில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறியுள்ள அந்த நிறுவனம், அதற்காக யூசர்கள் தங்களின் டெலிகிராம் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
ALSO READ | விலைமதிப்பில்லாத கொம்புகளுக்காக தென்னாப்பிரிக்காவில் வேட்டையாடப்படும் காண்டாமிருகங்கள்
கேலரியில் வீடியோவை ஸ்டோர் செய்யாமலேயே, நேரடியாக வீடியோவை பதிவு செய்து டெலிகிராமில் பகிரும் புதிய அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே ஷேர்ஷாட்டில் இருக்கும் அம்சம் ஆகும். ஆட்டோமேடிக்காக டெலிட் செய்யும் வசதியை டெலிகிராம் பரிசோதனை செய்து வருகிறது. யூசர்கள் சுமார் ஒரு மாதம் வரை டைமர் செட் செய்து கொள்ள முடியும். புதிய செட்டிங்ஸில் இரண்டு முறை பாஸ்வேர்டு செக் செய்யும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடியோ, புகைப்படம், ஸ்டிக்கர்ஸ் ஆகியவற்றை டெக்கரேட் செய்யலாம். அடுத்தடுத்து பல்வேறு புதிய அப்டேட்டுகளை டெலிகிராம் கொடுத்துள்ளதால், யூசர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. டெலிகிராம் அப்டேட்டைத் தொடர்ந்து சிக்னல் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளிலும் புதிய அப்டேட்டுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.