Home /News /technology /

டெலிகிராம் அப்டேட்: வீடியோ ஸ்டிக்கர்ஸ், புதிய ரியாக்ஷன்ஸ் உடன் வெளியான வெர்ஷன் 8.5!

டெலிகிராம் அப்டேட்: வீடியோ ஸ்டிக்கர்ஸ், புதிய ரியாக்ஷன்ஸ் உடன் வெளியான வெர்ஷன் 8.5!

டெலிகிராம்

டெலிகிராம்

Telegram Gets New Update : டெலிகிராம் வெளியிட்டுள்ள சமீபத்திய அப்டேட் ஆனது பக் பிக்ஸஸ் (Bug Fixes) உடன் சேர்த்து வீடியோ ஸ்டிக்கர்ஸ், மேம்படுத்தப்பட்ட மெசேஜ் ரியாக்ஷன்ஸ் மற்றும் பல புதிய அம்சங்களையும் கொண்டு வருகிறது.

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப்பிற்கு சரியான மாற்றாக, போட்டிட்டியாக நீடித்து வரும் பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பாரம் ஆன டெலிகிராம், தனது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு, லேட்டஸ்ட் அப்டேட் வழியாக பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

டெலிகிராம் வெளியிட்டுள்ள சமீபத்திய அப்டேட் ஆனது பக் பிக்ஸஸ் (Bug Fixes) உடன் சேர்த்து வீடியோ ஸ்டிக்கர்ஸ், மேம்படுத்தப்பட்ட மெசேஜ் ரியாக்ஷன்ஸ் மற்றும் பல புதிய அம்சங்களையும் கொண்டு வருகிறது. டெலிகிராம் நிறுவனம் ஒரு ப்ளாக் போஸ்ட் வழியாக இந்த லேட்டஸ்ட் அப்டேட் குறித்து அறிவித்தது. அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தும் வரும் நாட்களில் அனைத்து யூசர்களையும் சென்றடையும் என்றும் கூறப்படுகிறது. டெலிகிராமின் லேட்டஸ்ட் வெர்ஷன் 8.5 அப்டேட் வழியாக வரும் புதிய அம்சங்களை பற்றி மேலும் விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

1. வீடியோ ஸ்டிக்கர்ஸ்

அனிமேஷன் ஸ்டிக்கர்ஸ் - டெலிகிராமில் அணுக கிடைக்கும் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். இருப்பினும், முன்னதாக இந்த ஸ்டிக்கர்களை உருவாக்குவதற்கு அனுபவமும், அடோப் இல்லஸ்ட்ரேட்டர் போன்ற ஸ்பெஷல் சாப்ட்வேர்களும் தேவைப்பட்டன. ஆனால் இந்த புதிய அப்டேட் மூலம் டெலிகிராம் நிறுவனம், வழக்கமான வீடியோக்களிலிருந்து கன்வெர்ட் செய்யப்படும் ஸ்டிக்கர்களுக்கான ஆதரவைச் சேர்க்கிறது, ஆக அனைத்து பயனர்களும் எந்தவொரு வீடியோ எடிட்டிங் டூலையும் பயன்படுத்தி அனிமேஷன் ஸ்டிக்கர்களை எளிதாக உருவாக்க முடியும். கஸ்டம் வீடியோ ஸ்டிக்கர்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை யூசர்களுக்குக் கற்பிக்கும் வீடியோ ஸ்டிக்கர் கைடையும் டெலிகிராம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  ஸ்மார்ட்போன் கீபோர்டுகளை ஈஸியாக இயக்குவது, மாற்றுவது எப்படி?

2. மேம்படுத்தப்பட்ட ரியாக்ஷன்ஸ்

டெலிகிராமில் உள்ள ரியாக்ஷன்ஸ் இப்போது மிகவும் கச்சிதமான அனிமேஷன்களை பெறுகின்றன என்று டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெலிகிராமின் வெர்ஷன் 8.5 அப்டேட் ஆனது 'ஸ்மாலர் ரியாக்ஷனை' கொண்டு வருகிறது, இது மெனுவில் உள்ள ஒரு ரியாக்ஷனை அழுத்திப் பிடிப்பதன் மூலம் 'லார்ஜர் எபெக்ட்டை' அனுப்ப உதவுகிறது. ரியாக்ஷன்கள் இப்போது ஒத்திசைக்கப்பட்டுள்ளன (synchronised), எனவே பெறுநர்கள் நிகழ்நேரத்தில் அனிமேஷன்களைப் பார்ப்பார்கள் என்றும் டெலிகிராம் கூறி உள்ளது.



3. புதிய ரியாக்ஷன்ஸ் மற்றும் இன்டர்ஆக்டிவ் ஈமோஜிக்கள்

டெலிகிராம் ஆப்பின் இந்த புதிய அப்டேட் மெசேஜ்களுக்கு ஐந்து புதிய ரியாக்ஷன்களையும் சேர்க்கிறது - ஹார்ட் ஃபேஸ், மைண்ட்ப்ளோன், வொண்டரிங், அப்யூஸிங் மற்றும் கிளாப்பிங் ஈமோஜிகள். இவைகள் சிறந்த மற்றும் வெளிப்படையான விவாதங்களில் ஈடுபட உதவும் என்றும், இந்த அனிமேஷன் செய்யப்பட்ட ஈமோஜியை கிளிக் செய்வதன் மூலம் சின்க்ரனைஸ்டு ஃபுல் ஸ்க்ரீன் எபெக்ட்டை கட்டவிழ்த்து விடலாம் என்றும் டெலிகிராம் கூறுகிறது.

இதையும் படியுங்கள் :  ஜியோ போன் 5ஜி: எப்போது அறிமுகம்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன சிறப்பம்சங்கள் ?

4. மேம்படுத்தப்பட்ட நேவிகேஷன்

டெலிகிராம் நிறுவனத்தின் கூற்றுப்படி, அன்ரீட் சேனல்கள் வழியாகச் செல்லும்போது அல்லது சாட்களுக்கு இடையே நகரும் போது, ​​பயனர்கள் குறிப்பிட்ட சாட்டிற்கு திரும்பி செல்ல "பேக்" (Back) பட்டனை லாங் பிரெஸ் செய்யலாம். தவிர பார்வேட் மெசேஜ்கள், லிங்க்ஸ், யூசர் நேம்ஸ், ப்ரொபைல்ஸ் மற்றும் பலவற்றிலிருந்தும் கூட குறிப்பிட்ட சாட்களுக்கு திரும்ப முடியும்.

5. பக் பிக்ஸஸ் (Bug Fixes)

2022 ஜனவரியின் முதல் இரண்டு வாரங்களில் ஆப்பில் கண்டறியப்பட்ட சிக்கல்களைச் சரிசெய்வதில் முழுமையாக கவனம் செலுத்தி உள்ளதாகவும் டெலிகிராம் நிறுவனம் கூறியுளளது. புதிய வெர்ஷன் 8.5 அப்டேட் ஆனது மேம்படுத்தப்பட்ட கால் குவாலிட்டியைக் கொண்டுவருகிறது, மேலும் இன்ஸ்டன்ட் வியூ பேஜ்களை மொழிபெயர்ப்பதற்கான ஆதரவையும் சேர்த்துள்ளது. டஜன் கணக்கான சிறிய மேம்பாடுகளுடன், ஷேரிங் மெனுவிலிருந்து சைலன்ட் மெசேஜ்களை அனுப்பும் விருப்பத்தையும் டெலிகிராம் நிறுவனம் சேர்த்துள்ளது. குறிப்பாக ஐஓஎஸ் யூசர்கள், டேப் பாரில் உள்ள ஐகான்களை தட்டும்போது புதிய அனிமேஷன்களை காண்பார்கள் என்று டெலிகிராம் நிறுவனம் கூறி உள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Telegram

அடுத்த செய்தி