டெலிகிராம் என்பது ரஷ்ய மக்களும், உக்ரைன் மக்களும் எல்லைகளை கடந்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் பயன்படுத்தி வரும் மிகவும் பிரபலமான ஆப் ஆகும். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், இக்கட்டான நிலையில் சிக்கியிருக்கிறது டெலிகிராம்.
ஏனென்றால் ரஷ்யாவின் உளவு அமைப்பான எஃப்.எஸ்.பி. என்பது எத்தகைய சமூக ஊடகத்திலும் தகவல்களை உளவு பார்த்து விடும் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. குடிமக்களில் குறிப்பிட்ட நபர்களின் தகவல், விவாதம் மற்றும் தனி விவரங்கள் அனைத்தையும் இந்த நிறுவனம் எடுத்துவிடும். பொதுவாக போர் போன்ற பொது ஆபத்து மிகுந்த சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் கள நிலவரம் குறித்து உறவுகளுடன் பொதுமக்கள் தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள்.
இத்தகைய சூழலில், உக்ரைனில் என்ன சூழல் நிலவுகிறது என்பதை ஆழமாக தெரிந்து கொள்ளுவதற்கு ஏதுவாக, அந்நாட்டு மக்களின் சாட் விவரங்களை ரஷ்யா உளவு பார்க்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதில், மற்றுமொரு கவலை என்ன என்றால், பயனாளர்களின் டேட்டா பாதுகாப்பை உறுதி செய்யும் எண்டு-டூ-எண்டு என்கிரிப்டெட் பாதுகாப்பு டெலிகிராம் ஆப்பில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆகவே, டெலிகிராம் சாட்களை ரஷ்ய உளவு அமைப்புகள் உளவு பார்ப்பதற்கான சாத்தியம் மிக அதிகமாக உள்ளது.
அதேசமயம், பயனாளர்களின் விவரங்கள் எதுவும் ரஷ்ய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது என்று டெலிகிராம் ஆப் நிறுவனர் பாவெல் துரோவ் கூறியுள்ளார். இது ஒன்றுதான் தற்போது டெலிகிராம் பயனாளர்களுக்கு சற்று நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. என்ன நடந்தாலும் நாங்கள் பயனாளர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று துரோவ் தெரிவித்துள்ளார்.
ஆனால், எந்தவித பாதுகாப்பும் இல்லாத டெலிகிராம் ஆப் உள்ளே ரஷ்ய அதிகாரிகள் உளவு பார்க்காமல் எப்படி தடுக்கப்பட போகிறது என்பது குறித்தும், பயனாளர்களை பாதுகாக்க ஏதேனும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை.
Also Read : டெலிகிராமின் முக்கிய அம்சத்தை காப்பி அடிக்கப்போகும் வாட்ஸ் அப்
டெலிகிராம் நிறுவனர் கூறுவது என்ன
எனது பதிவுகளை நீங்கள் பார்த்து வந்தால், நான் அம்மாவின் பக்கம் இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரிய வரும். எனது குடும்ப பின்னணி என்பது உக்ரைனின் கிவிவ் நகருடன் தொடர்பு உடையது. என்னுடைய உண்மையான பெயர் உக்ரைனியன் (இவானியன்கோ). இந்த நாள் வரையிலும் எனது உறவினர்கள் உக்ரைனில் உள்ளனர். ஆகவே, இந்த இக்கட்டான சூழல் என்பது எனக்கும், டெலிகிராம் ஆப்பிற்கும் சேர்த்து தான்.
Also Read : சத்தமின்றி இந்த 2 ஆப்ஸ்களை நீக்கிய இன்ஸ்டாகிராம்!
9 ஆண்டுகளுக்கு முன்பே விகே என்ற ரஷ்யா மற்றும் உக்ரைனின் மாபெரும் சமூக ஊடகத்தின் சிஇஓ அதிகாரியாக நான் பணியாற்றினேன். அப்போது, ரஷ்ய அதிபருக்கு எதிராக பதிவிடும் உக்ரைன் மக்களுடைய தகவல்களை கொடுக்குமாறு ரஷ்ய உளவு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், நான் மறுத்துவிட்டேன்.
Also Read : கூகுள் பே ஆப்பில் யூபிஐ பின் நம்பர் எப்படி மாற்ற வேண்டும்?
இதனால், நான் ரஷ்யாவில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டேன். அதன் பிறகு அங்குள்ள வீட்டை இழந்தேன். பல ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது ரஷ்யாவில் நான் எல்லை. எனது நிறுவனமோ, ஊழியர்களோ அங்கு இல்லை. ஆனால், ஒன்று மட்டும் மாறவில்லை. எந்தக் காரணத்திற்காகவும் பயனாளர்களின் பாதுகாப்பை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவர்களின் தனியுரிமை என்பது புனிதமானது’’ என்று டெலிகிராம் நிறுவனர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.