வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரியை டெலிகிராமிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம்!

வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரியை டெலிகிராமிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம்!

வாட்ஸ்அப்

இதன்படி வாட்ஸ் அப்பில் இருக்கும் யூசர்கள் அவர்களது சாட்களை அப்படியே டெலிகிராமிலும் மாற்றிக் கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது, விட்ட இடத்திலிருந்தே உரையாடலைத் தொடங்கும் வசதி பயனர்களுக்குக் கிடைக்கும்.

  • Share this:
வாட்ஸ்அப் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியிட்ட பிரைவசி பாலிஸி அப்டேட் மூலம் பெரும் பின்னடைவை சந்தித்தது. யூசர்களின் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்த நிலையில், அதற்கு மாற்றாக ஒரு செயலியை மக்கள் தேட ஆரம்பித்தனர். அதன் விளைவாகவே சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற ஆப்கள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றன. முக்கியமாக இந்திய மக்கள் பலர் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த தொழில்நுட்ப சேவைகளில் உள்ள மாறுபாடுகளை முயற்சிக்க புதிய பயனர்கள் செய்தி சேவையில் ஈடுபடுவதால், ஃப்ரீவேர் கிளவுட் அடிப்படையிலான உடனடி செய்தி மென்பொருள் மற்றும் பயன்பாட்டு சேவை டெலிகிராம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் மூலம் யூசர்களின் சாட் ஹிஸ்டரியை வாட்ஸ்அப்பில் இருந்து அப்படியே டெலிகிராமிற்கு மாற்றிக்கொள்ள முடியும். தி வெர்ஜ் வெளியிட்ட தகவலின்படி, புதிய தளத்திற்கு மாறும்போது பயனர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியை இழக்க மாட்டார்கள். தற்போது இந்த அம்சம் ஆப்பிள் ஐபோன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. IOS இல், வெர்சன் 7.4 உடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி வாட்ஸ் அப்பில் இருக்கும் யூசர்கள் அவர்களது சாட்களை அப்படியே டெலிகிராமிலும் மாற்றிக் கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது, விட்ட இடத்திலிருந்தே உரையாடலைத் தொடங்கும் வசதி பயனர்களுக்குக் கிடைக்கும். தனி நபர் சாட், குரூப் சாட் என இரண்டையுமே வாட்ஸ்அப்லிருந்து மாற்றிக் கொள்ளலாம்.

இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு இன்னும் கிடைவில்லை என்றாலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என டெலிகிராம் தெரிவித்துள்ளது. டெலிகிராமின் iOS சேஞ்ச்லாக் சுட்டிக்காட்டியுள்ளபடி, வாட்ஸ்அப்பில் இருந்து மட்டுமல்லாமல், Line மற்றும் KakaoTalk ஆகியவற்றிலிருந்தும் சாட் ஹிஸ்டரிகளை மாற்றிக்கொள்ள முடியும்.

ஐபோன்களில் வாட்சப் உரையாடலைகளை எவ்வாறு மாற்றிக்கொள்ளலாம்?

உங்கள் ஆப்பிள் போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து நீங்கள் டெலிகிராமிற்கு மாற்ற விரும்பும் சாட்டிற்குள் நுழைய வேண்டும். அந்த சாட்டின் மேல் தோன்றும் 3 புள்ளிகளை கிளிக் செய்து அதில் உள்ள More மெனுவைத் திறந்து Export Chat என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். இதையடுத்து வாட்ஸ்அப்-ல் குறிப்பிட்ட முழு சாட்டின் பேக்-அப்பும் ஒரு ZIP File வடிவில் உருவாக்கும்.

அதன் பின்னர் ZIP File-ஐ டெலிகிராமில் IOS Share Sheet வழியாக இம்போர்ட் செய்ய முடியும்.

பின்னர் குறிப்பட்ட மெசேஜ்கள் உங்களுக்கும் உங்கள் காண்டாக்ட்டிற்கும் Sync செய்யப்படும்.

இந்த டெலிகிராம் செயலி தற்போது புதிய Migration Tool-ஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் கூட அதன் சமீபத்திய பதிப்பில் யூசர்கள் இந்த அம்சத்தை தற்போது அணுக முடியும். மேலும் இந்த புதிய அம்சத்தை முயற்சி செய்ய விரும்பும் பயனர்கள், ஆப் ஸ்டோரிலிருந்து சமீபத்திய அப்டேட்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரவிருக்கு வாரங்களில் டெலிகிராம் நிறுவனம் இந்த அம்சத்தினை இன்னும் பரவலாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Ram Sankar
First published: