• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • பிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ் அப் - டெலிகிராம், சிக்னல் ஆப்ஸ்கள் 1200% அசுர வளர்ச்சி

பிரைவசி பாலிசியால் சரிவுப்பாதையில் வாட்ஸ் அப் - டெலிகிராம், சிக்னல் ஆப்ஸ்கள் 1200% அசுர வளர்ச்சி

காட்சிப் படம்

காட்சிப் படம்

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய பிரைவசி பாலிசியால் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1200% அதிகரித்துள்ளது.

  • Share this:
வாட்ஸ் அப் நிறுவனம் புதிய பிரைவசி பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. மே 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய பாலிசியை பயனாளர்கள் அப்டேட் செய்யுமாறு அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. பயனர்கள் அப்டேட் செய்யாவிட்டால், தொடர்ந்து வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்தலாம், ஆனால் சில கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பு குறித்து உலக அளவில் எழுந்த எதிர்ப்புக்கு முதலில் பரிசீலிப்பதாக தெரிவித்த வாட்ஸ் அப், பின்னர் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இதனால், வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக கருத்தப்படும் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய பிரைவசி பாலிசிக்கு எதிராகவும், சிக்னல் செயலிக்கு ஆதரவாகவும் உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள சைபர் டெக் நிபுணர் எட்வார்டு ஸ்னோடன் ஆகியோரும் குரல் கொடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக சென்சார் டவர் நடத்திய ஆய்வில் இந்த இரண்டு செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1,200 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த டேட்டாவின்படி, ஆன்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் மொபைல் போன்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறித்து ஓராண்டு இடைவெளியில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 98 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 161 மில்லியன் பயனர்களை டெலிகிராம் கொண்டுள்ளது. சிக்னல் செயலியைப் பொறுத்தவரை முதல் முறையாக பதிவிறக்கம் செய்தவர்களின் கணக்கீட்டின் அடிப்படையில் 1,192 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் மட்டும் 64.6 மில்லியன் பயனாளர்கள் புதிதாக சிக்னல் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். டெலிகிராம் செயலியின் பதிவிறக்கமும் இந்த ஆண்டு ஜனவரி முதல் பதிவிறக்கம் அதிகரித்துள்ளது. ஜனவரியில் எடுக்கப்பட்ட தரவுகளில் 63.5 மில்லியன் பேர் டெலிகிராம் செயலியை பதவிறக்கம் செய்துள்ளதாகவும், இது 283 விழுக்காடு வளர்ச்சி என சென்சார் டவர் கூறியுள்ளது. இரண்டு செயலிகளும் என்ட்-டூ-என்ட் என்கிரிப்சனை கொடுக்கின்றன.

டெலிகிராமில் கிளப் ஹவுஸ் வாய்ஸ் சாட் வசதியும் இருப்பதால் பயனர்களை ஈர்க்கிறது. உலகளவில் வாட்ஸ் அப் செயலியின் வளர்ச்சி வேகமாக சரிந்துள்ளது. எனினும் வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை மட்டுமே குறைந்துள்ளது. பயனர்களிடைய ஒரு குழப்பமான மனநிலை இருப்பதையும் காண முடிவதாக அந்த டேட்டா தெரிவித்துள்ளது. மேலும், நடைமுறையில் உள்ள பிரைவசி பாலிசி உலகளவில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து வாட்ஸ் அப் செயலியின் வளர்ச்சியை கூற முடியும் என டெக் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: