2019ல் 5ஜி சேவையை அனுபவிக்கத் தயாராகுங்கள்! - போட்டிப்போடும் டெலிகாம் நிறுவனங்கள்

5ஜி சேவையை 2019-ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்ய சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.

Web Desk | news18
Updated: December 28, 2018, 12:16 PM IST
2019ல் 5ஜி சேவையை அனுபவிக்கத் தயாராகுங்கள்! - போட்டிப்போடும் டெலிகாம் நிறுவனங்கள்
5G (Representative image)
Web Desk | news18
Updated: December 28, 2018, 12:16 PM IST
4ஜி சேவையிலிருந்து 5ஜி சேவை 2019-ம் ஆண்டு களம் இறங்க உள்ளது. 5ஜி சேவையை அனைத்து வகைகளும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ள டெலிகாம் சேவை நிறுவனங்கள் மத்தியில் இதற்குக் கடும் போட்டியே நிலவுகிறது.

பல டெலிகாம் நிறுவனங்களும் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி நிறுவனங்களும் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அதே வேளையில் வெரிசான், AT&T, T-Mobile, மற்றும் ஸ்பிரின்ட் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை எந்த நகரங்களில் எல்லாம் முதலில் களம் இறக்கலாம் என ஆலோசித்து வருகின்றன. ஆனால், 5ஜி சேவையை பயன்படுத்தத் தகுந்த கருவிகளின் உற்பத்தி இன்னும் முழுவீச்சில் நடைபெறவில்லை என்பதே தற்போதைய நிலை.

இதுவரையில் 5ஜி சேவை அறிமுகம் குறித்து எந்தவொரு நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. ஐ-போன் 5ஜி சேவை உடனான ஐ-ஃபோனை 2020-ம் ஆண்டு வரையில் அறிமுகப்படுத்தப்போவதில்லை என்றுள்ளது. ஆனால், இதர ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் 2019-ன் தொடக்கத்திலேயே 5ஜி அறிமுகமாகும் என்ற அறிவிப்பை முன்னரே வெளியிட்டிருந்தனர்.

ஒன் ப்ளஸ், ஓப்போ போன்ற சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் 2019-ன் மத்தியில் இந்தியாவில் 5ஜி சேவையைக் கொண்டு வர உள்ளனர். இந்தப் பட்டியலில் ஜியோமியும் இணைந்துள்ளது. 5ஜி ஸ்மார்ட்ஃபோன்கள் தவிர 5ஜி மோடம் குறித்தான எந்தவொரு அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை.

மேலும் பார்க்க: அச்சத்தில் இருந்த சிறுத்தை மீது கற்களை எறிந்த மக்கள் - சீறிப்பாய்ந்ததில் 5 பேர் காயம்
First published: December 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...