Home /News /technology /

5ஜி-க்கு தயாராகுங்கள் - தொலை தொடர்பு நிறுவனங்களைக் கேட்டு கொண்ட மத்திய அமைச்சர்!

5ஜி-க்கு தயாராகுங்கள் - தொலை தொடர்பு நிறுவனங்களைக் கேட்டு கொண்ட மத்திய அமைச்சர்!

5ஜி சேவை

5ஜி சேவை

5G Network : 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் எடுத்த நிருவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கடிதங்களை வழங்கிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விரைவில் 5ஜி அறிமுகத்திற்குத் தயாராகுமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “5ஜி அப்டேட்: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக் கடிதம் வழங்கப்பட்டது. 5G வெளியீட்டிற்குத் தயாராகுமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" எனக்குறிப்பிட்டுள்ளார்.

    5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்திற்கு ஒதுக்கப்பட்டதில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கான ஏலம் 7 நாட்கள் நடைபெற்றது. இதன் மூலமாக மத்திய அரசுக்கு ரூ. 1.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது.



    இந்திய தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றைகளை 88,078 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதற்கு அடுத்ததாக 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை 43,084 கோடி ரூபாய்க்கு ஏர்டெல் நிறுவனம் ஏலம் எடுத்தது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் 18,799 கோடிக்கும், அதானி நிறுவனம் 212 கோடி ரூபாய்க்கும் அலைக்கற்றை உரிமங்களை வாங்கியுள்ளன.

    Also Read : வணிகத்திற்கு மூடு விழா நடத்திய மீஷோ நிறுவனம்.. 300 ஊழியர்கள் வேலை பறிபோனது

    ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை இந்த மாதம் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் 20 வருடாந்திர தவணைகளில் பணம் செலுத்த விரும்பினாலும், ஏர்டெல் நான்கு வருடாந்திர தவணைகளுக்குச் சமமாக ரூ.8,312.4 கோடியைச் செலுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.7,864.78 கோடியும், வோடபோன் ஐடியா ரூ.1,679.98 கோடியும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.18.94 கோடியும் செலுத்தியுள்ளன.

    இந்தியாவின் 5ம் தலைமுறைக்கான 5ஜி சேவையை விரைவில் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) மத்திய அமைச்சகங்கள் முழுவதும் ஒப்புதல் செயல்முறைகள் வேகமாகவும், தடையின்றியும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: 5G technology, Central government, Reliance Jio

    அடுத்த செய்தி