ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மேற்கு வங்கத்தில் 5ஜி சேவையை தொடங்கவிருக்கும் ஜியோ… மாற்றங்களின் பட்டியல் வெளியீடு

மேற்கு வங்கத்தில் 5ஜி சேவையை தொடங்கவிருக்கும் ஜியோ… மாற்றங்களின் பட்டியல் வெளியீடு

ஜியோ 5 ஜி.

ஜியோ 5 ஜி.

மேற்கு வங்கத்தில் 5 ஜி சேவை நடைமுறைப்படுத்தப்படும் விதம், அதனால் ஏற்படும் பயன்கள் உள்ளிட்டவை குறித்து ஜியோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேற்கு வங்கத்தில் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை தொடங்கவிருக்கிறது. 'பேரானந்த நகரம்' என அழைக்கப்படும் கொல்கத்தாவில் 45.7% சந்தைப் பங்குடன் பெரிதும் விரும்பப்படும் பிராண்டாக ஜியோ உருவெடுத்திருக்கிறது.

  இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

  உலகில் மிக நவீன 5ஜி அமைப்பாக ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) திகழப்போகிறது மற்றும் புரட்சியின் அடுத்தகட்டத்தை இது உருவாக்கும் என்பது நிச்சயம். மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மக்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்கவும் மற்றும் மானுட சமூகத்திற்கு தொழில்நுட்பம் சேவையாற்றுவதை உறுதிசெய்யவும் மேற்கு வங்கத்தில் தனது மேம்பட்ட ட்ரூ 5ஜி நெட்வொர்க் அறிமுக செயல்பாட்டை ஜியோ முன்னுரிமையுடன் செயல்படுத்தி வருகிறது.

  இந்த ஆண்டு முடிவடைவதற்குள் கொல்கத்தா பெருநகரம் முழுவதிலும் 5ஜி சேவை கிடைக்கப்பெறுவதற்காக ஜியோ பொறியியலாளர்கள் 24 மணிநேரமும் இடைவெளியின்றி பணியாற்றி வருகின்றனர். மாநிலத்தின் வட பகுதியின் நுழைவாயிலான சிலிகுரியில் தொடங்கி மேற்கு வங்கம் மாநிலம் முழுவதிலும் மற்றும் அசாம்/வடகிழக்கு மாநிலங்கள் வரையும், 5ஜி சேவை அறிமுகத்தை விரிவுப்படுத்த ஜியோ உறுதிபூண்டிருக்கிறது.

  யூசர்களின் விருப்பப்படி கட்டணம் செலுத்த அனுமதிக்கும் வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்.!

  ஜியோ பயனாளிகள், அவர்களது ஸ்மார்ட்ஃபோன்கள் மீது 500 Mbps முதல் 1 GBPS வரை அவற்றிற்கு இடைப்பட்ட அளவு வேகத்தை பெற்று அனுபவிக்கின்றனர். மிக அதிக அளவிலான தரவையும் (டேட்டா), சிரமமின்றி நேர்த்தியாக பயன்படுத்துகின்றனர்.

  மேற்கு வங்க மாநில அரசின் ஐடி & எலெக்ட்ரானிக்ஸ் துறை மற்றும் DOT-ஆல் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பயிலரங்கில் இம்மாநிலத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்பட மாற்றியமைக்க உதவுகிற சில பயன்பாடு நேர்வுகளை காட்சிப்படுத்துவதற்கென ஒரு எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை ஜியோ நிறுவியிருந்தது. "முன்னேறும் வங்காளம்" என்ற மேற்கு வங்க அரசின் தொலைநோக்கு திட்டத்தை வலுப்படுத்த அதனுடன் கைகோர்த்து இணைந்து செயல்பட ஜியோ விரும்புகிறது. ஜியோ ட்ரூ 5ஜியின் மூலம் வங்காளத்தை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்வதற்கான ஜியோவின் பொறுப்புறுதியாக அது இருக்கிறது.

  ஜியோ எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் இன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த சில அதிரடி மாற்ற எடுத்துக்காட்டுகளுள் சில கீழ்வருமாறு:

  ஏர்டெல் வாடிக்கையாளருக்கு செம ஷாக் - 11 மணி முதல் ’இந்த’ சேவைகள் இல்லை!

  (a) விவசாயம்: "Maatir Katha" போன்ற பல முனைப்புத் திட்டங்களை மேற்கு வங்க அரசு மேற்கொண்டுவருகிறது. IOT மற்றும் ட்ரோன் அடிப்படையிலான துல்லியமான வேளாண் தீர்வுகளுக்கு கணிசமான உத்வேகத்தை இது வழங்கும்; தீமை விளைவிக்கும் இரசாயனங்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அளவுக்கு அதிகமாக தெளிப்பதை குறைப்பதன் மூலம் வேளாண்மையில் உற்பத்தித் திறனை இது மேம்படுத்தும்.

  (b) கல்வி: டிஜிட்டல் முறையிலான கற்றல் செயல்முறை மாநிலத்தின் தொலைதூர பகுதிகளுக்கும் போய்ச் சேர்வதை இது ஏதுவாக்கும்; பள்ளி கட்டிடங்கள் இல்லாத பிரச்சனைக்கு தீர்வாக அமையும், ஆக்மெண்டட் ரியால்டியுடன் இன்டராக்டிவ் 3டி மாடல்களின் பயன்பாட்டை பரவலாக்கும்; மேலும் மாணவர்களுக்கு கற்றலை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியானதாகவும் ஆக்க ஆசிரியர்களுக்கு உதவும்.

  (c) சுகாதார பராமரிப்பு: மருத்துவமனை வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் தகுதியும், தரமும் வாய்ந்த சிறப்பு நிபுணர்களின் சேவையை இது ஏதுவாக்கும். டெலிரேடியாலஜி, இணைப்புவசதியுள்ள ஆம்புலன்ஸ், கிளினிக் போன்ற ஸ்மார்ட்டான சுகாதார பராமரிப்பு தீர்வுகளாக இதனை மாற்றுவதன் மூலம் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு உயர்தர சிகிச்சை சேவைகளை 5ஜி வழங்கமுடியும்.

  (d) ஸ்மார்ட் ஆஃபிஸ்: ஜியோ ஏர்ஃபைபர், கிளவுட் பிசி, வீடியோ டெலிஃபோனி- கண்காணிப்பு, டிஜிட்டல் சைனேஜ் போன்ற எளிதான ஒயர் இல்லாத பிளக் & பிளே தீர்வுகளின் மூலம் அலுவலகங்கள் இன்னும் திறன்மிக்கதாக ஸ்மார்ட்டானவையாக மாறவிருக்கின்றன.

  (e) மேம்படுத்தப்பட்ட மொபைல் பிராட்பேண்ட்-ன் சாத்தியங்கள்: ஜியோ ட்ரூ 5ஜி வலையமைப்பின் வழியாக ஒரு மொபைல் ஃபோன் மீது ஒயர்லெஸ் அடிப்படையில் வழங்கப்படும் பிராட்பேண்ட் போன்ற உயர்வேகம், இம்மாநிலத்திலுள்ள அனைத்து குடிமகன்களது வாழ்க்கையையும் மேலும் செழுமையாக்கும்; இன்னும் அதிக அளவிலான செயல்நடவடிக்கைகளை மேற்கொள்ள திறனதிகாரம் கொண்டவர்களாக அவர்களை மாற்றும்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: 5G technology, Jio