தடுப்பூசி போட்டு கொண்டால் Apple AirPods முற்றிலும் இலவசம் - புதிய அறிவிப்பால் டீனேஜர்ஸ் குஷி!

தடுப்பூசி போட்டு கொண்டால் Apple AirPods

மேயர் அறிவித்துள்ள சலுகைகளை பெற 12-17 வயதிற்குட்பட்ட மாணவர்களாக இருக்க வேண்டும்

  • Share this:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன. சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக உலகம் இந்த கொடூர தொற்றை எதிர்த்து போராடி வரும் நிலையில், கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவிலிருந்து தப்பிக்க கேடயமாக உலக நாடுகள் நம்புவது தடுப்பூசிகளை தான்.

வைரஸ்கள் இயல்பிலேயே உருமாறும் தன்மை உடையது என்பதால், முதல் முதலில் பரவ துவங்கிய கொரோனாவை காட்டிலும் பல வீரியமிக்க உருமாறிய வைரஸ்கள் உலகை தற்போது ஆட்டிப்படைத்து வருகின்றன. எப்படி இருந்தாலும் தடுப்பூசி ஒன்றே தற்போதைக்கு மருத்துவ உலகம் நம்பும் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறது.

தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்களை விட, முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களை வைரஸ் தாக்கினாலும் அவர்களின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படாது என்பதை தொடர்ந்து மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு சில நாட்டு மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நிலையில், அமெரிக்க உட்பட வளர்ந்த நாடுகளில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பலர் விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.

ALSO READ |  கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா? விளக்கும் நிபுணர்கள்..!

பல நாடுகளில் 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கோவிட் -19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்கு ம் வகையில் , அமெரிக்காவின் வாஷிங்டன் நகர அதிகாரிகள் தடுப்பூசி போட்டு கொள்ளும் பதின்ம வயதினருக்கு (டீன் ஏஜ்), விலையுயர்ந்த பரிசுகள் வழங்கப்படும் என்ற வியப்பூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.அதிக டீனேஜர்ஸ் தடுப்பூசிகளை பெற ஊக்குவிக்கும் பொருட்டு, வாஷிங்டன் டிசி-யின் மேயரான முரியல் பவுசர், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் டீனேஜர்ஸுக்கு இலவசமாக ஆப்பிள் ஏர்போட்கள் (AirPods) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ALSO READ |  ஆப்கானியர்களை கொல்வதை நிறுத்துங்கள்: உலகத் தலைவர்களுக்கு கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் வேதனை வேண்டுகோள்

இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள முரியல் பவுசர், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் டீனேஜர்ஸுக்கு இலவச ஆப்பிள் ஏர்போட்கள் வழங்கப்படும் 3 சென்டர்கள் பற்றிய தகவலையும் ஷேர் செய்து உள்ளார். இதன்படி ப்ரூக்லேண்ட் எம்எஸ், சூசா எம்எஸ், ஜான்சன் எம்எஸ் ஆகிய 3 சென்டர்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளும் டீன்ஏஜ் வயதினருக்கு விலையுர்ந்த ஆப்பிள் ஏர்போட்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.இது தவிர அவர்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவர்கள் தங்களது முதல் டோஸைப் பெற்ற பிறகு 25,000 டாலர் மதிப்புள்ள ஸ்காலர்ஷிப், ஹெட்போன்ஸ் அல்லது iPad-யும் பெறலாம் என்றும் வாஷிங்டன் டிசி மேயர் முரியல் பவுசர் அறிவித்துள்ளார். 12-17 வயதிற்குட்பட்ட டீனேஜர்கள் மட்டுமே இதற்கு தகுதியுடையவர்கள் என்றும் வாஷிங்டன் மேயர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ | கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

மேயரின் இந்த புதிய அறிவிப்பு பற்றி தகவல் தெரிவித்துள்ள வாஷிங்டன் நகர அதிகாரிகள், மேயர் அறிவித்துள்ள சலுகைகளை பெற 12-17 வயதிற்குட்பட்ட மாணவர்களாக இருக்க வேண்டும். மேலும் முதல் டோஸ் தடுப்பூசியாக இருக்க வேண்டும். இலவச AirPods பெற விரும்பும் மாணவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள தயாராகி, தங்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரை அழைத்து கொண்டு மேற்குறிப்பிட்ட தடுப்பூசி மையங்களில் ஏதாவது ஒன்றிற்கு செல்ல வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்து தடுப்பூசியின் முதல் டோஸை பெறும் டீனேஜர்ஸ் (12-17 வயதிற்குட்பட்டவர்கள்), இலவசமாக Apple AirPods-களை பெறுவதோடு பிற சலுகைகளை வெல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: