ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ரூ.6,299 விலையிலான Tecno Pop 5 LTE ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்..

ரூ.6,299 விலையிலான Tecno Pop 5 LTE ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்..

Tecno Pop 5

Tecno Pop 5

மொபைல் இண்டஸ்ட்டிரியை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் மலிவு விலையில் சிறந்த அம்சங்களைக் கொண்டு வர கூடிய ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவதே எங்கள் இலக்கு என்று Tecno கூறி இருக்கிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மலிவு விலை ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பாளரான டெக்னோ (Tecno) இந்தியாவில் புதிய Tecno Pop 5 LTE மொபைலை அறிமுகப்படுத்தி அதன் பாப்-ஸ்மார்ட் ஃபோன் சீரிஸை புதுப்பித்துள்ளது. சீன ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தியாளரான tecno, லேட்டஸ்ட்டாக Tecno Pop 5 LTE என்ற இந்த ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பட்ஜெட் ஃபோன் பின்புறத்தில் டூயல் கேமராக்கள் மற்றும் 6.5 இன்ச் ஸ்கிரீனுடன் வருகிறது. இந்த என்ட்ரி லெவல் ஸ்மார்ட் ஃபோன் Gen Z வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் "ஆல்-ரவுண்டர்" செயல்திறனை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. மொபைல் இண்டஸ்ட்டிரியை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் மலிவு விலையில் சிறந்த அம்சங்களைக் கொண்டு வர கூடிய ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவதே எங்கள் இலக்கு என்று Tecno கூறி இருக்கிறது.

Tecno Pop 5 LTE மொபைலின் விலை..

இந்தியாவில் Tecno Pop 5 LTE மொபைலின் விலை ரூ. 6,299-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஃபோனை அமேசான் இந்தியா மூலம் ஜனவரி 16 முதல் Amazon ஸ்பெஷல்களின் ஒரு பகுதியாக வாங்கலாம்.Tecno-வின் இந்த புதிய போன் Deepsea Luster, Ice Blue மற்றும் Turquoise Cyan உள்ளிட்ட 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

Also read:  விமான நிலையத்தின் தண்ணீர் சப்ளையை துண்டித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் மகன் அடாவடி!

Tecno Pop 5 LTE ஸ்பெசிஃபிகேஷன்கள்..

Tecno இன்னும் அதன் வெப்சைட்டில் இந்த ஸ்மார்ட் ஃபோனை பட்டியலிடவில்லை. என்றாலும் டூயல் சிம்மை கொண்ட Tecno Pop 5 LTE மொபைல் Android 11 Go அடிப்படையிலான HiOS 7.6-ஐ இயக்குகிறது. இந்த OS-ஆனது Vault 2.0, Smart Panel 2.0, Kids Mode, Social, Turbo, Dark themes, Parental control, Digital Wellbeing, Gesture Call Picker மற்றும் பல போன்ற அம்சங்களை கொண்டு வருகிறது. இந்த மொபைல் 6.52-இன்ச் HD+ IPS LCD டாட் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் 480 நிட்ஸ் பிரைட்னஸை கொண்டுள்ளது. ஃப்ரன்ட் பேனலில் சிங்கிள் செல்ஃபி கேமராவிற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உள்ளது. சிப்செட் விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் ஃபோன் 2GB ரேம் மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இன்டர்னல் ஸ்டோரேஜை அதிகரித்து கொள்ளலாம்.

Also read:  Kumbalangi: நாட்டிலேயே முதல் சானிட்டரி நாப்கின் இல்லாத கிராமம் இது தான்!

டூயல் பேக் கேமராக்களுடன் வரும் Tecno Pop 5 LTE, 8 மெகாபிக்சல் மெயின் சென்சார் f/2.2 ஹோல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் f/2.4 ஹோலுடன் உள்ளது. பின்புறத்தில் டூயல் ஃபிளாஷ் லைட் உள்ளது. பிரகாசமான செல்ஃபிக்களுக்காக இது ‘மைக்ரோ ஸ்லிட் ஃப்ளாஷ்லைட்’ அம்சத்தைக் கொண்டுள்ளது. Tecno Pop 5 LTE 5,000mah பேட்டரியைப் பெறுகிறது, இது 31 ஸ்டாண்ட்பை டைம் , 115 மணிநேர மியூசிக் பிளேபேக் மற்றும் 18 மணிநேர காலிங் டைமை வழங்குவதாக கூறப்படுகிறது. மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களில் IPX2 வாட்டர்-ரெஸிஸ்டன்ட் பில்ட், ஃபேஸ் அன்லாக்,3.5mm ஆடியோ ஜாக் மற்றும் 14 பிராந்திய மொழிகளுக்கான சப்போர்ட் ஆகியவை அடங்கும்.

First published:

Tags: Smartphone, Technology