• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஒன்பிளஸ் 9 ஆர்டி முதல் ஆப்பிள் வாட்சுகள் வரை - இந்த வார முக்கிய ‘டெக்’ சம்பவங்கள்!

ஒன்பிளஸ் 9 ஆர்டி முதல் ஆப்பிள் வாட்சுகள் வரை - இந்த வார முக்கிய ‘டெக்’ சம்பவங்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7க்கான புக்கிங்கை இணையத்தில் தொடங்கி இருக்கிறது.

  • Share this:
ஒன்பிளஸ் 9 ஆர்டி முதல் முடங்கிய பேஸ்புக் என இந்த வாரத்தில் நடைபெற்ற முக்கிய டெக் நிகழ்வுகளை இங்கு காண்போம்.

ஒன்பிளஸ் 9 ஆர்டி :

ஒன்பிளஸ் நிறுவனத்தில் 9 ஆர்டி மாடல் வரும் 13ஆம் தேதி சீனாவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒன்பிளஸ் 9 ஆர்டி ‘குவால்காம் ஸ்னாப்டிராகன்’ 888 SoC என்ற ப்ராசஸருடன் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளியாகிறது. 4,500 mAh பேட்டரி திறனுடனும், 65T பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

இந்த மாடல் மற்ற ஒன்பிளஸ்களை போலவே, 6.55-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியாகிய ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் நோர்ட் 2 மாடல்களை போலவே இதில் மூன்று கேமரா உள்ளது. இதன் விலை தோராயமாக இந்திய மதிப்பில் 23,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவறான தகவல்கள் இனி ‘ப்ளாக்’ :

வானிலை மற்றும் காலநிலை தொடர்பான தவறான கருத்துக்கள் இணையத்தில் அதிகளவில் இடம்பெறுவதாக கூகுளுக்கு புகார்கள் பெருமளவு வந்து கொண்டிருக்கிறது.அதனை தடுக்கும் விதமாக, உலகின் காலநிலை மாற்றம் குறித்த தவறான தகவல்களை பதிவு செய்யும் விளம்பரங்களை தடை செய்யும் நடைமுறையை ‘கூகுள்’ நிறுவனம் தொடங்கி இருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 :

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7க்கான புக்கிங்கை இணையத்தில் தொடங்கி இருக்கிறது. ஐபோன் 13க்கான புதிய ஆப்பிள் வாட்ச், கணினி, ஐபாட் போன்ற பல பொருட்களை செப்டம்பர் மாத விழாவில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதனை அடுத்து இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விலை ரூ .41,900ல் அறிமுகப்படுத்தியுள்ளது, இதனை இணையதளத்தில் புக்கிங் செய்து பெற்று கொள்ளலாம் என்றும் ‘ஆப்பிள்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

லீக்கான டேட்டா :

அமேசானுக்குச் சொந்தமான கேமிங் பிளாட்பார்ம் ‘ட்விட்ச் இணையதளத்தில் இருந்து கிட்டத்தட்ட 125 ஜிபி டேட்டா லீக் ஆகியுள்ளது. இதனை சரி செய்து வருகிறோம், இனி இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாது. வாடிக்கையாளர்கள் எங்களை மன்னிக்க வேண்டும் என்று ட்விட்ச் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also read... இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி A13 5G விவரங்கள் - சாம்சங் நிறுவனம் அதிர்ச்சி!

முடங்கிய பேஸ்புக் :

கடந்த திங்கள்கிழமை அன்று ஏறக்குறைய 6 மணி நேரமாக முடங்கியது பேஸ்புக் சேவை. தவறான உள்ளமைவு ( faulty configuration change ) காரணமாகவே பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் போன்ற சேவைகள் முடங்கியது. ‘ இதனடையடுத்து எங்களின் 3.5 பில்லியன் பயனர்களின் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன. பயனாளர்களின் தகவல்கள் வெளியாகி இருக்கிறது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்று பேஸ்புக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: