• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • பப்ஜி நியூ ஸ்டேட் முதல் ஆப்பிள் மேக்புக் ப்ரோ வரை - இந்த வார முக்கிய டெக் நிகழ்வுகள்!

பப்ஜி நியூ ஸ்டேட் முதல் ஆப்பிள் மேக்புக் ப்ரோ வரை - இந்த வார முக்கிய டெக் நிகழ்வுகள்!

இந்த வார முக்கிய டெக் நிகழ்வுகள்

இந்த வார முக்கிய டெக் நிகழ்வுகள்

கூகுள் நிறுவனம் ‘பிக்சல் 6’ சீரிஸை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

  • Share this:
ஒவ்வொரு நாளும் புதுப்புது டெக்னலாஜி அறிமுகம் ஆகிறது. அந்தவகையில் இந்தவார முக்கிய நிகழ்வுகள் குறித்து இங்கு காண்போம்.,

பப்ஜி புதிய அப்டேட் :

பப்ஜி கேமின் வெறியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி இது. பப்ஜி கேமின் புதிய நியூ ஸ்டேட் (PUBG New State) நவம்பர் 11ல் வெளியாகும் என்று பேட்டில் கிரௌண்ட்ஸ் மொபைல் இந்தியாவின் டெவலப்பர் ஆன ‘க்ராப்டான்’ நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல்களில் பயன்படுத்தி விளையாடலாம் என்று அறிவித்து இருக்கிறார்கள். பழைய வெர்சன்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். பல்வேறு புதிய அம்சங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக கூகுள் பிக்சல் 6 :

கூகுள் நிறுவனம் ‘பிக்சல் 6’ சீரிஸை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி உள்ளது. கூகுள் பிக்சல் 6 ப்ரோவுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது இந்த பிக்சல் 6. இந்த ஸ்மார்ட்போனை டென்சர் சிப்பினை கொண்டு இதனை உருவாக்கி இருக்கிறார்கள். கூகுள் பிக்சல் 6 சீரிஸ் ஆனது ஒன்பிளஸ் 9, 9 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் போன்றவற்றுடன் போட்டியிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதன் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிளின் புதிய மேக்புக் :

கடந்த வாரம் நடைபெற்ற ‘ஆப்பிள்’ நிகழ்ச்சியில் ஆப்பிளின் புதிய தயாரிப்பான ‘மேக்புக் ப்ரோ’ வெளியிடப்பட்டது. இது M1 Pro மற்றும் M1 Max SoC என்ற இரண்டு வகைகளாக வருகிறது. இரண்டு வகையான திரை அளவுகளில் வரும் இதன் விலை ரூ.1,94,900ல் தொடங்குகிறது என்று அறிவித்து இருக்கிறார்கள். இந்த மேக்புக் ப்ரோ ‘14 இன்ச்’ அளவில் உள்ளது.

ஆப்பிளின் புதிய OS :

கடந்த வாரம் நடைபெற்ற ‘அன்லீஷ்ட்’ நிகழ்வில், புதிய வன்பொருளுடன் () தங்களின் அடுத்த OS ஆன ‘மேகோஸ் மான்டேரியை’ வெளியிடுவதற்கான தேதியையும் அறிவித்துள்ளது. அக்டோபர் 25ம் தேதி இந்த OS வெளியாகும் என்றும், இதனை ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

நஷ்டத்தை சந்தித்து வரும் டிவிஎஸ் :

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் ‘பிரீமியம் அப்பாச்சி’ மோட்டார் சைக்கிள்களின் 25,000 யூனிட்கள் இழப்பை சந்தித்தது. செமிகண்டக்டர் எனப்படும் குறைக்கடத்தி பற்றாக்குறையால் இந்த இழப்பை சந்தித்துள்ளது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் .

மற்ற நிறுவனங்களும் இதேபோல் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அப்பாச்சி பிராண்டின் கீழ் ஐந்து மாடல்களை ரூ .1.06 லட்சம் (RTR 160) தொடங்கி ரூ .2.55 லட்சம் (RR 310) வரை விற்பனை செய்கிறது டிவிஎஸ். ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சிப் பற்றாக்குறையால் ரூ .270 கோடி முதல் ரூ .330 கோடி வரை வருவாய் இழப்பைச் சந்தித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்டெல் - ஆப்பிள் கூட்டணி :

ஆப்பிள் நிறுவனத்தின் ‘M1’ சிப்கள் சிறப்பாக செயல்படுகிறது. இன்டெல் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் இணைந்து புதிய தயாரிப்புகளை வெளியிட விருப்பம், விரைவில் இது நடக்கும் என்று கூறியுள்ளார் இன்டெல் நிறுவனத்தின் சிஇஓவான பாட் கெல்சிங்கர். இன்டெல்லின் சிப்புகளால் இயங்காதது எதுவும் இல்லை. ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போடுவது கடினமாக இருந்தாலும், அவர்களை வெல்ல இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்’ என்றும் கூறினார்.

Also read... நவம்பர் 2021 முதல் இந்த மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது!

புதிய ஏர்பாட்ஸ்கள் :

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘ஏர்பாட்ஸ் 3’ புதிய வடிவமைப்புடன் வருகிறது. ஆப்பிளின் முந்தைய தயாரிப்பான ஏர்பாட்ஸ் ப்ரோவில் உள்ளது போல, அதே காண்டூர் டிசைனுடன் வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மேக்புக் ப்ரோ, ஹோம்பாட் மினி போன்றவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: