• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த மூன்று ஸ்மார்ட்போன்கள் - சிறப்பம்சங்கள் என்னென்ன?

பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த மூன்று ஸ்மார்ட்போன்கள் - சிறப்பம்சங்கள் என்னென்ன?

விவோ Y15A

விவோ Y15A

இன்ஃபினிக்ஸ் தனது புதிய ஹாட் 11 பிளே ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

  • Share this:
ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கென்றே வாராவாரம் புதுவித ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவை எல்லாமே சிறந்த ஸ்மார்ட்போன்கள் என்றால், நிச்சயம் கிடையாது. காரணம் சில ஸ்மார்ட்போன்கள் விலை குறைவாக விற்கப்படுவதால் அவற்றின் செயல்திறன்கள் குறைக்கப்படுகிறது. அதே போன்று சில ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பான அம்சங்கள் தந்திருப்பார்கள். ஆனால் அவற்றின் விலை நம் பட்ஜெட்டிற்குள் இருக்காது. ஒரு சில ஸ்மார்ட்போன்களில் மட்டுமே நம் பட்ஜெட்டிற்குள் இருக்கும். அப்படிப்பட்ட 3 ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு காண்போம்.,

* விவோ Y15A :

இந்த விவோ Y15A ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் வெளியாகி உள்ளது. மிஸ்டிக் ப்ளூ மற்றும் வேவ் கிரீன் ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதில் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ், டூயல் சிம் வசதி, 6.51 இன்ச் HD+ (720×1600 பிக்ஸல்ஸ்) IPS LCD டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ P35 ப்ராசெஸ்ஸார் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டு மதிப்பில் PHP 7999-க்கு விற்கப்படுகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.11,900 ஆகும்.

மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 11 வகையை சேர்ந்த ஃபன்டச் ஓஎஸ் 11.1 தரப்பட்டுள்ளது. இதில் 13MP AI ரியர் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டர் கேமிரா உள்ளது. இதன் முன்புற செல்பி கேமிரா 8MP வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரியும், 10W சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

* இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 பிளே :

இன்ஃபினிக்ஸ் தனது புதிய ஹாட் 11 பிளே ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நீல நிறம், வெளிர் பச்சை, கருப்பு நிறம், சூரிய ஒளி போன்ற தங்க நிறம் ஆகிய 4 வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. மேலும் இதில் 6.82 இன்ச் HD+ (720×1,640 பிக்ஸல்ஸ்) IPS வாட்டர்டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளே தரப்பட்டுள்ளது. 4GB RAM + 124GB ஸ்டோரேஜ் வசதியும், மீடியாடெக் ஹீலியோ G35 ப்ராசெஸ்சாரும், ஆண்ட்ராய்டு 11 வகையை சார்ந்த XOS 7.6 ஓஎஸும் இதில் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமிரா வசதி உள்ளது. 13MP பிரைமரி கேமிரா மற்றும் 8MP செல்பி கேமிரா இதில் வழங்கப்பட்டுள்ளது. 6,000mAh பேட்டரி பேக் அப் வசதியை இன்ஃபினிக்ஸ் ஹாட் 11 பிளேவில் நீங்கள் பெறலாம். இதன் விலை பற்றிய தகவலை இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

Also read... 2 பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களின் விலையை திடீரென உயர்த்திய Xiaomi நிறுவனம்...!

* டெக்னோ பாப் 5C :

உங்கள் பட்ஜெட்டில் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமென்றால் இந்த டெக்னோ பாப் 5C போனை தேர்ந்தெடுக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆரம்ப நிலை வசதிகளை மட்டுமே கொண்டுள்ளது. இதில் 5 இன்ச் (480×584 பிக்ஸல்ஸ்) FWVGA டிஸ்பிளே வசதி உள்ளது. 1GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. இதில் 5MP ரியர் கேமிராவும், 2MP செல்பி கேமிராவும் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-சில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை பற்றிய தகவலையும் அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: