Home /News /technology /

Tech market: ரியல்மீ நார்சோ 30 முதல் ஆப்பிள் மியூசிக் லாஸ்லெஸ் வரை!

Tech market: ரியல்மீ நார்சோ 30 முதல் ஆப்பிள் மியூசிக் லாஸ்லெஸ் வரை!

Tech market

Tech market

ஸ்மார்ட்போன்களில் ஆன்டிராய்டு 12, ரியல்மீ நார்சோ 30 ஆகியவை புதிய வரவுகளாக உள்ளன.

  • News18
  • Last Updated :
ஒவ்வொரு வாரமும் டெக் மார்க்கெட்டில் புதிய படைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் மற்றும் சிப் செட்டுகள் இந்த வாரமும் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன்களில் ஆன்டிராய்டு 12, ரியல்மீ நார்சோ 30 ஆகியவை புதிய வரவுகளாக உள்ளன. புதிய ரியல்மே வாட்ச் 2 ப்ரோ, ரியல்மே பட்ஸ் வயர்லெஸ் 2 நியோ மற்றும் பல சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அவற்றின் பியூச்சர்களை தெரிந்து கொள்வோம்.

REALME NARZO 30

சீன நிறுவனமான ரியல்மீ, ரியல்மீ நார்சோ 30 சீரியஸை புதுப்பித்துள்ளது. ஏற்கனவே உள்ள நார்சோ 30 ஏ மற்றும் நார்சோ Pro -வின் பட்டியலில் இணைந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து பேசிய ரியல்மீ இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மாத்வ் ஷெத், 4 ஜி மற்றும் 5 ஜி வெர்சன்களுடைய ரியல்மீ நார்சோ 30 விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறியுள்ளார். எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை அவர் உறுதியாக தெரிவிக்கவில்லை. ரியல்மீ நார்சோ 30 வெர்சன் ஸ்மார்ட்போனில், 6.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, முழு ஹெச்.டி ரிசல்யூசன், 90 ஹெர்ட்ஸ் ரெப்பிரஷன் ஆப்சன் உள்ளது. 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் சிம் கார்டு. 48 மெகா பிக்சலையுடைய டிரிபிள் கேமரா, செல்பிக்கு 16 மெகா பிக்சல் கேமராவும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 12

இந்த வாரம் நடைபெற்ற கூகுள் ஐ.ஓ கீநோட் கான்பரன்சில் அடுத்த தலைமுறை மொபைல் இயக்க முறை ஆன்டிராய்டு 12-ஐ அறிமுகப்படுத்தியது. ஆன்டிராய்டு UI-க்கு பெரிய வடிவமைப்பு மாற்றத்தை கொண்டுவந்துள்ள ஆன்டிராய்டு 12, புதிய லாக் முறை மற்றும் விரைவான மற்றும் பல்வேறு குயிக் செட்டிங்ஸ் டைல்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது. லாக் ஸ்கிரீனில் பெரிய வடிவிலான கடிகாரத்தை மட்டும் இருக்கும் நிலையில், எந்த அறிவிப்புகளும் இடம்பெறாது. வெப்பம், தேதி ஆகியவை இடதுபுறத்தில் காட்டும். அதிகம் வெளிசம் கொண்ட ஸ்லைடர் மற்றும் கீபேர்டிலும் புதிய வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Also read... Apple iPad-களில் இன்று வரை ஏன் கால்குலேட்டர் App சேர்க்கப்படவில்லை என்று தெரியுமா?

ஆப்பிள் மியூசிக் லாஸ்லெஸ்

வாடிக்கையாளர்களின் ஆடியோ திருப்தியை மேம்படுத்தும் வகையில் டால்பி அட்மோஸூடன், ஸ்பேஷியல் ஆடியோவை இணைக்க உள்ளது. இந்த புதிய அம்சம் வரும் ஜூன் மாதத்தில் இருந்து ஆப்பிள் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே சந்தாதாரர்களாக இருப்பவர்களுக்கு, இந்த மேம்படுத்தப்பட்ட ஆடியோ தொழில்நுட்பம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆப்பிள் ஏர்போட்ஸ் வயர்லெஸ் இயர்பட், ஆப்பிள் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்கள் மற்றும் ஆப்பிள் ஹோம் பாட் அல்லது ஹோம் பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை வைத்திருப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

QUALCOMM SNAPDRAGON 778G, 5G SOC

அமெரிக்க சிப்மேக்கர் குவால்காம் தனது சமீபத்திய சிப்செட்டை மொபைல்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குவால்காமின் 5 ஜி ஸ்னாப்டிராகன் உச்சி மாநாட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி 5 ஜி SoC தொடங்கப்பட்டது. சிப்செட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப்செட்டின், வழித்தோன்றலாக புதிய சிப்செட் அள்ளது. மேம்படுத்தப்பட்ட உள்ளமைப்பைக் கொண்டுள்ள குவால்கம் ஸ்நாப்டிராகன் 778ஜி, 5ஜி எஸ்.ஓ.சி பயனர்களுக்கு மல்டிமீடியா அனுபவத்தைக் கொடுக்கும். முந்தைய வெர்சன்களைவிட தற்போதைய சிப்செட் இருமடங்கு சிறந்த செயற்கை நுண்ணறிவு செயல்திறன் மேம்பாட்டை கொடுக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

POCO M 3 pro 5G

Poco நிறுவனம் POCO M 3 pro 5 G என்ற புதிய ஸ்மார்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய போகோ எம் 3 ப்ரோ மீடியா டெக் Dimensity 700 செயலியைக் கொண்டுள்ளது. இது வழக்கமான மாடலில் கிடைக்கும் குவால்காம் மொபைல் சிப்செட்டுக்கு பதிலாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் 5ஜி இணைப்பைக் கொண்டுவர வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்கோ எம் 3 புரோ 5 ஜி, 6.5 இன்ச் முழு ஹெச்டி + எல்சிடி டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டுடன் ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ளலாம். டூயல் சிம்கார்டு. மூன்று பின்புற கேமார 48 மெகாபிக்சல், செல்பிக்கு 8 மெகாபிக்சல் முன்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Android

அடுத்த செய்தி