ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி வொர்க் ஃப்ரம் ஹோம் இல்லை: பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

இனி வொர்க் ஃப்ரம் ஹோம் இல்லை: பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

டிசிஎஸ் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனம்

TCS : டிசிஎஸ் நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் அலுவலகம் வந்து பணிபுரிய அழைப்பு விடுதுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

TCS நிறுவனம் இனி வொர்க் ஃப்ரம் ஹோம் இல்லை என்றும், அனைத்து ஊழியர்களும் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

கோவிட் வைரஸ் தொற்றால் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட பாதிப்பு, அலுவலகம் சென்று தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலையைப் புரட்டிப் போட்டது. இணையத்தின் ஆதரவுடன், வீட்டிலிருந்தபடியே பெரும்பாலான ஊழியர்கள் வேலை செய்தனர். சில வாரங்களுக்கு முன் வரை ரிமோட் வொர்க் தொடர்ந்து வரும் நிலையில், ஊழியர்களை அலுவலகம் அழைக்கலாமா அல்லது வீட்டில் இருந்தே ஹைப்ரிட் மாடலில் பணியாற்றும் திட்டத்தைச் செயல்படுத்தலாமா என்று பல நிறுவனங்கள் சிந்தித்து வருகின்றன.

மிகப்பெரும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனம் 80 சதவிகித ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதில் குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று நாட்களாவது அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அனைவருக்கும் பொருந்தும் என்றும் அனைத்து ஊழியர்களுமே இதைப் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம் என்பதும் உள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது முழுவதுமாக முடிந்துவிட்டது, இனி ஊழியர்கள் அனைவருமே அலுவலகத்திற்கு வந்து தான் வேலை செய்ய வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் அனைத்து ஊழியர்களும் வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என்றும், சீனியர் லெவல் ஊழியர்கள், மூத்த அதிகாரிகள் அனைவருமே வாரத்திற்குக் குறைந்தது ஐந்து நாட்களாவது அலுவலகத்தில் வந்து வேலை செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

அதாவது சீனியர் லெவல் ஊழியர்கள் அனைவருக்கும் இனி வீட்டிலிருந்து வேலை என்பதே கிடையாது. அவர்கள் நிறுவனத்தில் வந்து தான் வேலை செய்ய வேண்டும் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Also Read : அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் - மிஸ் பண்ணக்கூடாத ஸ்மார்ட் போன் ஆஃபர்கள்!

டிவிஎஸ் நிறுவனம் மட்டுமல்லாது தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களான டெஸ்லா ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களுமே தனது எல்லா ஊழியர்களையும் அலுவலகத்தில் வந்து பணியாற்ற வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் கோவிட் தொற்றுக்கு முந்தைய நிலை போல அலுவலகத்தில் மட்டும்தான் பணி என்ற சூழல் இதுவரை ஏற்படவில்லை. டெஸ்லா நிறுவனம் தன்னுடைய ஊழியர்கள் குறைந்தது வாரத்திற்கு 40 மணி நேரங்களாவது அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனம் வாரத்தில் பாதி நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஹைப்ரிட் மாடலை பின்பற்றி வருகிறது. HCL மற்றும் டெக் மஹிந்திரா நிறுவனங்களும் கணிசமான அளவில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளது.

Published by:Janvi
First published:

Tags: Office Work, TCS, Work From Home