இந்த ஸ்மார்ட்போனை மடக்கலாம், விரிக்கலாம், சுருட்டலாம்..!- டிசிஎல் தரும் புதிய அறிமுகம்

புதிய ஸ்மார்ட்போன், சாதாரண 6 இன்ச் ஸ்மார்ட்போன் தோற்றத்திலிருந்து 10 இன்ச் ஸ்மார்ட்போன் ஆக விரியும்.

இந்த ஸ்மார்ட்போனை மடக்கலாம், விரிக்கலாம், சுருட்டலாம்..!- டிசிஎல் தரும் புதிய அறிமுகம்
மடிக்கும் வகையிலான போன்
  • News18
  • Last Updated: March 9, 2020, 5:36 PM IST
  • Share this:
டிசிஎல் என்ற நிறுவனத்தின் பெயர் பிரபலமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் தொடர்ந்து பல சாதனைகளை இந்நிறுவனம் நிகழ்த்தி வருகிறது.

சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் ஒன்றை மூன்றாய் மடிக்கும் வடிவமைப்புக்கான காப்புரிமையை ஜியோமி நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால், அதற்கெல்லாம் போட்டியாக டிசிஎல் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய ஸ்மார்ட்போன், சாதாரண 6 இன்ச் ஸ்மார்ட்போன் தோற்றத்திலிருந்து 10 இன்ச் ஸ்மார்ட்போன் ஆக விரியும்.

அதே போனை இரண்டு, மூன்றாக மடிக்கலாம். சப்பாத்தியைச் சுருட்டுவது போலவும் சுருட்டலாம். இந்த மாடலை உலக அளவில் அறிமுகம் செய்துள்ளதில் முன்னோடி ஆகியுள்ளது டிசிஎல் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் அநேக நன்மைகள் இருந்தாலும் மடித்துச் சுருட்டினால் மிகவும் கனமுடையதாக இந்த போன் மாறிவிடுகிறது.


இந்த ஒரு விஷயம் இந்த ஸ்மார்ட்போனை அன்றாடம் பயன்படுத்தும் மக்களிடம் சென்றடையச் செய்யாது. இதனால் இதற்கான தீர்வை மட்டும் இந்நிறுவனம் தற்போது ஆராய்ச்சி செய்து வருகிறது.

மேலும் பார்க்க: மக்களை வீட்டுக்குள் முடக்கிய கொரோனா... மொபைல் கேம்ஸ் செயலிகளுக்கு திடீர் வருமான வளர்ச்சி!


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading