2070ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான தனது உறுதிப்பாட்டின் காரணமாக, தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் நாட்டை வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது. பெருநிறுவன தலைவர்கள் மற்றும் சாதாரண மக்கள் என இருதரப்பினருமே இந்த நிலையான ஆற்றல் மாற்றத்தை அடைவதற்கு தங்கள் அர்ப்பணிப்பை வழங்க வேண்டும்.
அதன்படி, News 18 நெட்வொர்க், விழிப்புணர்வை ஏற்படுத்த Tata Power: சஸ்டைனபிள் இஸ் அட்டைனபிள் என்ற சிறப்பு முயற்சியைத் தொடங்கியுள்ளது. இது வணிகங்கள், அரசாங்கங்கள் மற்றும் மக்கள் எதிர்காலத்தில் எவ்வாறு நிலையான மற்றும் குறைந்த கார்பன் பயன்பாட்டை மேற்கொள்ளலாம் என்பதற்கான உரையாடல்களை உருவாக்கி அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்தப் பெரிய இலக்கை அடைய எங்களுக்கு உதவுவதில் மின்சாரத் துறை மிக முக்கியமான பொறுப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் நிறுவனங்களில் ஒன்றான Tata Power, அதன் மொத்த ஆற்றலில் 32% ஐ புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்கிறது, இது சிறந்த நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிக்குப் பங்களிக்கும். சோலார் கூரைகள், EV சார்ஜர்கள், சோலார் பம்ப்கள் மற்றும் எனர்ஜி மேனேஜ்மென்ட் தீர்வுகள் போன்ற பல்வேறு அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தில் Tata Power முன்னணி பங்கு வகிக்கிறது.
"சஸ்டைனபிள் இஸ் அட்டைனபிள்" என்பது குறித்து கலந்துரையாட டாக்டர் பிரவீர் சின்ஹா News 18 நெட்வொர்க்கில் இணைகிறார். அவரது கருத்தின்படி, இந்த நோக்கத்தை அடைவதன் மூலம், "ஆற்றல், பாதுகாப்பு, சமபங்கு மற்றும் நிலைத்தன்மை" ஆகியவற்றைப் பெற முடியும். "விரைவான வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா உலகளவில் ஆற்றல் தேவைகளில் மிகப்பெரிய அதிகரிப்பை எதிர்கொள்ளும்" என்று டாக்டர். சின்ஹா கூறுகிறார். "அடுத்த பத்தாண்டுகளில் இந்த அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்வதில் சுத்தமான பசுமை ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கும்."
கிடைக்கக்கூடிய வகையில் மலிவு விலை மின்சாரத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஒரு நிலையான வாழ்க்கைத் தரத்தை அடைவதற்காக, சிறிய ஆனால் முக்கியமான மாற்றங்களைச் செய்வதில் வணிகங்களுக்கும் நுகர்வோருக்கும் உதவ Tata Power விருப்பம் கொள்கிறது. டாக்டர். சின்ஹாவின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதார செழுமையை ஊக்குவிப்பதோடு, "காலநிலை மாற்றத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதற்கு வழிவகுக்க வேண்டியது நமது தலையாய பொறுப்பு" ஆகும்.
இந்த மாற்றம் ஒரு விருப்பமல்ல, மாறாக "இந்த நாட்டு மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான அர்ப்பணிப்பு". டாக்டர். சின்ஹா, "செயலைச் செய்கையில் காட்டு" என்பதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார், மேலும் Tata Power தனது தற்போதைய 32% பசுமை எரிசக்தி போர்ட்ஃபோலியோவை 2030க்குள் 70% ஆகவும், 2045க்குள் 100% ஆகவும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே இதுபோன்ற உயர்ந்த இலக்கை அமைக்கும் முதல் நிறுவனமாக இது திகழ்கிறது என்றும் கூறினார்.
மாற்றத்திற்கான வரைபடத்தில் பல நிகழ்வுகள் அடங்கியிருக்கும். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளைப் பயன்படுத்துவதன் மூலம், சுத்தமான எரிசக்தி தீர்வுகள் வணிக ரீதியாகச் சாத்தியமானதாகவும், நுகர்வோருக்குச் சிக்கனமானதாகவும் மாறும் என்று டாக்டர் சின்ஹா கருதுகிறார். உதாரணமாக, உலகின் மிகப்பெரிய மைக்ரோ-கிரிட் திட்டங்களில் ஒன்று Tata Power மூலம் நிர்வகிக்கப்படுகிறது. கூடுதலாக, சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் விரைவில் ஆற்றல் மேலாண்மைச் சேவைகளை அணுக முடியும். நிலையான எரிசக்தி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதும், அவற்றை விரைவாக ஏற்றுக்கொள்வதுமே தற்போதைய இலக்காக இருக்கும்.
டாக்டர் சின்ஹா உலகில் மூன்று குறிப்பிடத்தக்க மாற்றங்களை கணித்துள்ளார். முதலாவது டிகார்பனைசேஷன் ஆகும், இங்கு சுத்தமான பசுமை ஆற்றல் அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இரண்டாவது ஆற்றல் பரவலாக்கம், இதற்கு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் கலப்பின தீர்வுகள் கொண்ட மாதிரிகள் தேவைப்படும். உதாரணமாக, பகலில் சூரிய சக்தியும், இரவில் காற்றின் ஆற்றலும் மின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.
பசுமைத் திட்டங்களுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் இளம் தொழில்முனைவோர்களின் ஒத்துழைப்பு இத்தகைய முயற்சிகளுக்குத் தேவைப்படும். Tata Power நிறுவனத்தால் டெல்லியில் நிறுவப்பட்ட கிளீன் எனர்ஜி இன்டர்நேஷனல் இன்குபேஷன் சென்டர் "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் செயல்படும் எண்ணற்ற தொழில்முனைவோருக்கு லேப் டு மார்க்கெட் இன்குபேஷன் ஆதரவை" வழங்குகிறது. இந்த ஸ்டார்ட்அப்கள் "ஒரு பெரிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை" ஏற்படுத்துவதில் முதன்மையானவையாக இருக்கும். உலகளாவிய ஆற்றல் அணுகல், ஆற்றல் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுத்த தொழில்நுட்பங்கள் ஆகியவை முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளாக இருக்கும். டாக்டர். சின்ஹாவின் கூற்றுப்படி, இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது, "உலகம் ஆற்றலை உற்பத்தி செய்யும் விதத்தையும் பயன்படுத்தும் விதத்தையும் மாற்றும்."
அதே வழியில், மின்சார இயக்கமும், எதிர்காலத்தில் மாற்றப்படும் என்று டாக்டர் சின்ஹா கூறினார். EV சார்ஜிங் உள்கட்டமைப்பை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு உண்மையில் ஒரு பெருங்கவலையாக உள்ளது. "எரிபொருள் பற்றாக்குறையை" அனுபவிக்கும் பயனர்களுக்கு உதவ, Tata Power நாட்டிலேயே மிகப்பெரிய EV சார்ஜிங் நெட்வொர்க்கை வழங்குகிறது, நாடு முழுவதும் 2,300 க்கும் மேற்பட்ட நிலையங்கள் உள்ளன. கூடுதலாக, இது வாடிக்கையாளர்களுக்கு சுமார் 20,000 ஹோம் சார்ஜர்களுக்கான அணுகலை வழங்கியுள்ளது. நாட்டின் அதிகரித்து வரும் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அரசாங்கம் மற்றும் ஆட்டோமொபைல் அசல் உபகரண உற்பத்தியாளர்களுடன் (OEMs) தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுகிறது.
மூன்றாவது டிஜிட்டல்மயமாக்கல். இறுதி நிலை இணைப்பு நிறுவப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த இது முக்கியமாக இருக்கும். மதிப்புச் சங்கிலியில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், இறுதி நுகர்வோரின் நலனுக்காக உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவை தடையின்றி இணைக்கப்படும். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்துவது தரவுச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான வாய்ப்புகளை வழங்கும். நிறுவனங்களும் இறுதிப் பயனர்களும் ஆற்றல் அமைப்புடன் முன்பை விட தற்போது மிகவும் திறம்பட தொடர்புகொள்வதால், இந்த முயற்சிகள் ஆற்றல் செயல்திறனை ஜனநாயகப்படுத்தும்.
பல தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும், மேலும் சுத்தமான பசுமை எரிசக்தியை நோக்கி நாம் முன்னேற வேண்டுமானால் அரசாங்கம் கணிசமான அளவு உதவிகளை வழங்க வேண்டும். “2030க்குள் 500 ஜிகாவாட் சுத்தமான எரிசக்தி என்ற நமது இலக்கை அடைய முடியும். பயன்பாடுகள், வணிகங்கள் மற்றும் தொழில்துறைக்கான புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடமைகளில் 47% இலக்கை அடைந்ததாகச் சமீபத்தில் அறிவித்த சாதனைக்கு நன்றி” என்று டாக்டர் சின்ஹா கூறினார். பயன்பாடுகள் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் ஊக்கத்தொகைகளும் அபராதங்களும் இருக்க வேண்டும்.
பெரும்பாலான மாநில விநியோக நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதாக அவர் கூறினார். அவற்றைப் பொருளாதார ரீதியில் லாபகரமானதாக மாற்றுவது அவசியம், எனவே அவர்கள் அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வாங்க முடியும். வாடிக்கையாளர்கள் தாங்களாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆற்றல் பரவலாக்கம் அவசியமானதாக இருக்கும். கிராமப்புறங்களில் சோலார் பம்புகளைப் பயன்படுத்த தீவிரமாக ஊக்குவிக்கப்படுகின்றன, இதன் மூலம் விவசாயிகள் தங்கள் சொந்தத் தேவைகளுக்காக ஆற்றலைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தண்ணீரை விற்று கூடுதலாக வருமானம் ஈட்டவும் முடியும்.
இறுதியில், இதை அடைவது பல தொழிற்துறைகளில் உள்ள வணிகம் மற்றும் நுகர்வோர் ஒத்துழைப்பைப் பொறுத்தது. தொழில்நுட்பங்களையும் புதுமையான தீர்வுகளையும் பயன்படுத்துவது பசுமையான மற்றும் தூய்மையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். இத்தகைய சிறிய படிநிலைகள் மூலம், நிலைத்தன்மை என்பது உண்மையில் அடையக்கூடியதாக இருக்கும் என்று டாக்டர் சின்ஹா நிகழ்ச்சியின் முடிவில் கூறினார்.
Promoted Content
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TATA, Technology