Home /News /technology /

Tata Neu App | ஒரே வாரத்தில் 2.2 மில்லியன் பேர் டாடா நியூ செயலி டவுன்லோடு - இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Tata Neu App | ஒரே வாரத்தில் 2.2 மில்லியன் பேர் டாடா நியூ செயலி டவுன்லோடு - இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Tata Neu App | ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பலருக்கும் இந்த நியூ ஆப் மிகவும் பயனள்ளதாக இருக்கும். 120 மில்லியன் பயனர்கள் மற்றும் 2,500 ஆஃப்லைன் ஸ்டோர்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் தளத்துடன் இந்த செயலி தொடங்கியது.

    கடந்த ஒரே வாரத்தில் 2.2 மில்லியன் பேர் டாடா நியூ செயலி டவுன்லோடுசெய்துள்ளனர். இதன் சிறப்பம்சங்களைத் தெரிந்துகொள்வோம்.

    இந்தியாவின் உள்ள நிறுவனங்களில் முதன்மையானது டாட்டா நிறுவனம். எப்போதும் மக்களுக்கு தேவையான புது புது விஷயங்களை தந்து கொண்டே இருப்பதில் டாட்டா முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தற்போது டாடா நியூ (Tata Neu) என்கிற புதுமையான செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அறிமுகமான இந்த செயலி, மிக விரைவிலேயே டாப் இடத்தை பிடிக்க தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகமான இந்த செயலியை இதுவரை 2.2 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று டாடா டிஜிட்டலின் தலைமை செயல் அதிகாரியான் (CEO) பிரதிக் பால் ஏப்ரல் 14ம் தேதி அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    டாடா நியூ ஆப் அறிமுகம் செய்ததில் இருந்து பலர் இதை தொடர்ந்து டவுன்லோடு செய்து வருகின்றனர். குறிப்பாக இதில் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்ற பிறகு மேலும் பல புதிய பிரிவுகளையும் சேர்க்க உள்ளதாக அதன் உயர் நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்த செயலியானது மக்களுக்கு பல வகையில் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி இதில் மளிகை, எலக்ட்ரானிக்ஸ், ஹோட்டல்கள், உடல்நலம், விமானங்கள், அழகு, பொழுதுபோக்கு, ஆடம்பரம், கிரிக்கெட் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12 பிரிவுகளை கொண்ட செயலியாக தற்போது அறிமுகமாகி உள்ளது.

    Read More : டாட்டாவின் Neu ஆப்.. அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் !

    ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பலருக்கும் இந்த நியூ ஆப் மிகவும் பயனள்ளதாக இருக்கும். 120 மில்லியன் பயனர்கள் மற்றும் 2,500 ஆஃப்லைன் ஸ்டோர்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் தளத்துடன் இந்த செயலி தொடங்கியது. இது மிகவும் பிரபலமான செயலியாகவும் தற்போது மாறி உள்ளது. ரிலையன்ஸ் மற்றும் அமேசான் போன்ற முக்கிய நிறுவனங்களின் செயலிகளை காட்டிலும் இது முதன்மையானதாக மாற்ற உள்ளதாக தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆரம்பத்தில் 8,00,000 டாடா குழும ஊழியர்கள், அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே இந்த டாட்டா நியூ ஆப் திறந்திருந்தது. அதன் பிறகு தற்போது அனைவரும் பயன்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரிய வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கு முன்பே, இந்த செயலியானது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் ஏற்கனவே 1,00,000 டவுன்லோடுகளை பெற்று விட்டது. மேலும் இந்த செயலியானது ஏர்ஏசியா இந்தியா, பிக் பாஸ்கெட், க்ரோமோ, ஸ்டார்ப்பக்ஸ், டாடா 1mg, டாட்டா கிளிக், டாடா பிளே, டைட்டன், டானிஷ்க், டாடா மோட்டார்ஸ், வெஸ்ட் சைட், IHCL, Qmin போன்ற பல பிராண்டுகளின் தாயகமாக அமைந்துள்ளதாக தலைமை அதிகாரி பால் தெரிவித்து கொண்டார்.

    இனி மக்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய இந்த டாட்டா நியூ ஆப் முன்னோடியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: TATA, Technology

    அடுத்த செய்தி