டாடா டிஜிட்டல் நிறுவனமானது அமேசான், ஜியோ மற்றும் கூகுள் போன்றவற்றை எதிர்கொள்ள டாடா நியூ (Tata Neu) என்கிற ஒரு ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு ஆன்-ஸ்டாப் மொபைல் ஆப் ஆகும், இது ஷாப்பிங், பண பரிமாற்றம் உட்பட பல வகையான சேவைகளை செய்ய உதவும் என்பது கூடுதல் சுவாரசியம்.
டாடா நியூ ஆப் ஆனது ஏப்ரல் 7 ஆம் தேதி பொது மக்களுக்கு பயன்படுத்த கிடைத்தது . மேலும் இந்த ஆப்பானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கிறது. முதலில் டாடா நியூ ஆப் ஆனது டாடா குழுமத்தின் ஊழியர்களுக்கு மத்தியில் டெஸ்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
"டாடா நியூ என்பது, டாடா யுனிவர்ஸ் முழுவதும் உள்ள பல பிராண்டுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த தளமாகும். ஒரு சூப்பர்-ஆப் ஆக வடிவமைக்கப்பட்டுள்ள டாடா நியூ ஆனது தினசரி மளிகை பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ், பைனான்ஸியல் சொல்யூஷன்ஸ், விமானங்கள், ஹாலிடேஸ் மற்றும் பல வகையான சேவைகளை வழங்குகிறது" என்று டாடா டிஜிட்டல் தன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் டாடா நியூ என்பது ஒரு "ஆல் இன் ஒன்" ஆப் ஆகும்.
"டாடா நியூ ஆப்பில் உள்ள ஒவ்வொரு பிராண்டும் நியூகாயின்ஸ் (NeuCoins) எனப்படும் பொதுவான ரிவாட் (Reward) மூலம் இணைக்கப்பட்டுள்ளது, இதை அனைத்து பிராண்டுகளில் இருந்தும் - ஆன்லைனில் மற்றும் பிஸிக்கல் லோக்கேஷன்களில் - சம்பாதிக்க முடியும். டாடா நியூ ஆப்பில் உள்ள 'எக்ஸ்ப்ளோரர்களுக்கு' ஏர்ஏசியா இந்தியா, பிக் பாஸ்கெட், க்ரோமா, டாடா கிளிக், ஐஎக்ஹ்சிஎல், வெஸ்ட்சைட் மற்றும் பலவற்றில் இருந்து மிஸ் பண்ணவே முடியாத ஆஃபர்கள் வழங்கப்படும்,” என்று டாடா டிஜிட்டல் இணையதளம் கூறுகிறது.
மேலும் "உங்கள் மின்சார கட்டணம், மொபைல், டிடிஎச், பிராட்பேண்ட் பில்கள், ரீசார்ஜ்கள் மற்றும் பலவற்றைக் கண்காணித்து, சரியான நேரத்தில் எந்த அவசரமும் இல்லாமல் பணத்தை செலுத்தலாம்" என்றும் இந்த ஆப்பின் நன்மைகளை விளக்கும் பட்டியல் கூறுகிறது.
Also Read : எலான் மஸ்க் - ட்விட்டர் பனிப்போர் : என்ன நடந்தது.!
ஆப்பில் உள்ள 'இன்பில்ட்' டாடா பே-வை பயன்படுத்தி யூசர்களால் தங்களது பில்களை செலுத்த முடியும் என்றும் ஆப்பின் கூகுள் பிளே ஸ்டோர் விளக்கம் குறிப்பிடுகிறது. இந்த சேவையானது அரசாங்கத்தின் யுனிஃபைட் பேமண்ட் இன்டர்பேஸின் கீழ் (UPI) செயல்படும், இதில் இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கும். இந்த ஆப்பை பயன்படுத்தி யூசர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு பணத்தையும் அனுப்ப முடியும்.
Also Read : 10 லட்சத்துக்கும் மேற்பட்ட WhatsApp கணக்குகள் முடக்கம்..!
“டாடா பே யுபிஐயை பயன்படுத்தி, உங்கள் பினெட் அக்கவுண்டில் இருந்து ஒரு நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உங்கள் காண்டாக்டுகளுக்கு நேரடியாக பணத்தை அனுப்புங்கள்” என்றும் டாடா டிஜிட்டல் இணையதளம் கூறுகிறது. மேலும் இதன் கீழ் கிடைக்கும் சேவைகளை பயன்படுத்தும் போது, டாடா நியூ ஆப் ஆனது ஆஃபர்கள், சலுகைகள் மற்றும் பிற வெகுமதிகளை வழங்கி கொண்டே இருக்குமாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apps, Technology