கார் வாங்குபவர்களுக்கு சலுகைகள்... எச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணையும் டாடா மோட்டார்ஸ்...

டாடா டிகோர்/டியாகோ கார் பாதுகாப்பு சோதனையில் 5-க்கு 4 மதிப்பெண் பெற்ற கார் ஆகும். குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இரு கார்களும் 3 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

டாடா மோட்டார்ஸ் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து தனது வாகன வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக நிதி சலுகைகளை வழங்கியுள்ளது.

 • Share this:
  வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மற்ற நிறுவனங்களை போல, டாடா நிறுவனமும் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து ‘படிப்படியான படிநிலை திட்டம்’ மற்றும் ‘TML ஃப்ளெக்ஸி டிரைவ்’ ஆகிய இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகைகள் இந்தாண்டு நவம்பர் மாத இறுதி வரை
  கிடைக்கும். மேலும், நிறுவனத்தின் புதிய EV வரம்புடன் முழு புதிய ஃபாரெவர் BS- VI கார்கள் மற்றும் SUV கார்களும் மீட்டெடுக்கப்படலாம்.

  முதல் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் இப்போது EMI விருப்பங்களை மாதம் ஒரு லட்சத்திற்கு ரூ .799 வரை பெறலாம். இது தயாரிப்பு மற்றும் மாறுபாட்டைப்
  பொறுத்து கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் கிடைக்கும். மேலும் இத்திட்டத்தின் படி, வாகனம் வாங்குபவரின் கட்டண வசதியைப் பொறுத்து EMI கொடுப்பனவுகள்
  படிப்படியாக 2 வருட காலத்திற்குள் அதிகரிக்கும்.

  இரண்டாவது திட்டமானது, நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 மாதங்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஏனெனில், அவர்கள் வசதிக்கு
  ஏற்ப தயாரிப்பு மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு குறைந்தபட்ச EMI ஆக ரூ .979 செலுத்தலாம்.

  மேலும் படிக்க... உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் எளிமையான முறையில் நாமினியை இணைக்கலாம்..  மேற்கூறியவற்றை சேர்த்து, இரண்டு திட்டங்களின் கீழும் முழு PV தயாரிப்பு வரம்பில் 100% எக்ஸ்-ஷோரூம் நிதியையும் டாடா நிறுவனம் வழங்குகிறது. மேலும், இந்த சலுகைகளைப் பெற, வாடிக்கையாளர்கள் தங்களது அருகிலுள்ள டாடா மோட்டார்ஸ் டீலரை அல்லது எச்.டி.எஃப்.சி வங்கி கிளையை அணுகலாம் மற்றும் டாடா கார் வாங்குவதில் தங்கள் ஆர்வத்தையும் பதிவு செய்யலாம்.
  Published by:Vaijayanthi S
  First published: