முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / டாட்டாவின் Neu ஆப்.. அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் !

டாட்டாவின் Neu ஆப்.. அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் !

டாட்டா நியூ ஆப்

டாட்டா நியூ ஆப்

Tata Neu App : ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட டாட்டா நியூ (Tata Neu) செயலியானது மக்களுக்கு பல வகையில் உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Last Updated :

டாட்டா நிறுவனமானது அவ்வப்போது புது புது விஷயங்களை அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது சூப்பர் செயலியான Neu (நியூ) என்கிற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்ற பிறகு புதிய பிரிவுகளையும் சேர்க்க உள்ளதாக அதன் உயர் நிர்வாகி தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் கூறுகையில், இந்த செயலியானது வாடிக்கையாளரின் கருத்துக்களை பெற்ற பிறகு அதற்கேற்ற சலுகைகளை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட டாட்டா நியூ (Tata Neu) செயலியானது மக்களுக்கு பல வகையில் உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மளிகை, எலக்ட்ரானிக்ஸ், விமானங்கள், ஹோட்டல்கள், உடல்நலம், அழகு, ஆடம்பரம், கிரிக்கெட், பொழுதுபோக்கு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12 பிரிவுகளை கொண்ட செயலியாக தற்போது அறிமுகமாகி உள்ளது. இது மிகவும் பிரபலமான செயலியாகவும் உள்ளது.

also read : இனி இந்த பரிசோதனை கட்டாயம்... வாகன உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு..

இதுவரை இந்த டாட்டா நியூ செயலியை கிட்டத்தட்ட 2.2 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் பன்சால், ஒரு நிகழ்வின் போது, இந்த சூப்பர் செயலி குறித்து பேசினார். அதில் "பெரும்பாலான நுகர்வோர் நுகர்வு முறைகளை நாங்கள் மறைக்க விரும்புகிறோம்" என்று குறிப்பிட்டு பேசினார். உலகளவில், சமூக செய்தி, டிஜிட்டல் பணம், உணவு போன்ற முக்கிய சேவைகளை மையமாக வைத்து வெற்றிகரமான சூப்பர் ஆப்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம், இ-மொபிலிட்டி, ஆன்லைன் ஷாப்பிங், பயன்பாட்டு பில்களை செலுத்துதல் மற்றும் பல இவற்றில் அடங்கும்.

also read : பணம் அனுப்பும் விதிமுறையை திடீரென்று மாற்றிய எச்.டி.எப்.சி வங்கி!

இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் நுகர்வோர் அளவானது 2030 ஆம் ஆண்டளவில் $800 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் பெரிய அளவில் இருக்கும் என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ரெட் சீர் (RedSeer) தெரிவித்துள்ளது. நாட்டின் ஆன்லைன் சில்லறை விற்பனை சந்தையானது அடுத்த பத்தாண்டுகளில் மொத்த விற்பனை மதிப்பில் 350 பில்லியன் டாலராக வளர வாய்ப்புள்ளது.

டாட்டா டிஜிட்டலின் சிஇஓ, பிரதிக் பால் கருத்துப்படி, இந்த புதிய செயலி 120 மில்லியன் யூசர்கள், 2,500 ஆஃப்லைன் கடைகள் மற்றும் 80 மில்லியன் பயன்பாட்டு தடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், "எங்களிடம் எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், பயணம், விருந்தோம்பல், மளிகை பொருட்கள், மருந்தகம் மற்றும் நிதிச் சேவைகள் வரையிலான பல முன்னணி நுகர்வோர் பிராண்டுகள் உள்ளன. டாடா நியூ செயலியுடன் மிகவும் வேறுபட்ட நுகர்வோர் தளத்தை உருவாக்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்" என பிரதிக் பால் தெரிவித்தார். இத்துடன் இந்த செயலியானது ஏர்ஏசியா இந்தியா, பிக் பாஸ்கெட், க்ரோமோ, ஸ்டார்ப்பக்ஸ், டாடா 1mg, டாட்டா கிளிக், டாடா பிளே, வெஸ்ட் சைட், IHCL, Qmin உள்ளிட்ட பல பிராண்டுகளின் தாயகமாக அமைகிறது.

First published:

Tags: TATA, Technology