முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / கிராமப்புறங்களில் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு- தமிழகத்துக்கு 2-ம் இடம்

கிராமப்புறங்களில் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு- தமிழகத்துக்கு 2-ம் இடம்

செல்போன்

செல்போன்

பல தொழில்நுட்ப வசதிகளால் மொபைல் இன்டெர்நெட் உடனான ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு தமிழகக் கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது என்கிறது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கிராமப்புறங்களில் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடுகள் அதிகம் உள்ள இந்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் இடத்தில் உள்ளது. 

இன்டெர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்படுத்தும் கிராமங்கள் நிறைந்த மாநிலமாக ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளது. அடுத்த இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டது.

ஆனால், தொழில்நுட்பங்கள் நிறைந்த மாநிலங்களாக உள்ள மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் கிராமப்புற ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு என்பது 30%-க்கும் குறைவாகவே உள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 30, 2018 வரையில் மொபைல் இன்டெர்நெட் உடன் ஸ்மார்ஃபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 490.66 மில்லியன் எனக் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்த மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா பேசுகையில், “சிறந்த உள்கட்டமைப்பு, நெட்வொர்க் விரிவுபடுத்துதல், புதிய தொழில்நுட்பங்கள், கூடுதல் ஸ்பெக்ட்ரம், டெலிகாம் ப்ளான்கள், விலை குறைவான ஸ்மார்ட்ஃபோன்கள் வருகை எனப் பல காரணங்கள் மொபைல் இன்டெர்நெட் உடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு அதிகரித்துள்ளது” என்றார்.

தமிழக கிராமப்புறங்களில் சுமார் 41.98% மக்கள் மொபைல் இன்டெர்நெட் சேவை உடனான ஸ்மார்ஃபோன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து தமிழகத்துக்கான BSNL அதிகாரி ராஜு கூறுகையில், “தமிழக கிராமப்புறங்களில் சிறந்த சேவையை நாங்கள் வழங்குகிறோம். பல கிராமங்களில் வை-ஃபை சேவை உள்பட பல தொழில்நுட்ப சேவைகளும் நகரங்களுக்கு இணையாகவே வழங்கப்பட்டு வருவதும் காரணம்” எனக் கூறினார்.

மேலும் பார்க்க: காங்.-திமுகவை விட பலமான கூட்டணியை பாஜக அமைக்கும்: தமிழிசை

First published:

Tags: Internet, Mobile Phone Users, Smart Phone