இன்ஸ்டாகிராமில் ‘ஹேக்கிங் பக்’... கண்டறிந்த தமிழருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு!

தற்போது இன்ஸ்டாகிராமில் இத்தவறு சரி செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 19, 2019, 5:24 PM IST
இன்ஸ்டாகிராமில் ‘ஹேக்கிங் பக்’... கண்டறிந்த தமிழருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு!
லக்‌ஷ்மன் முத்தையா. (facebook- Laxman Muthiyah)
Web Desk | news18
Updated: July 19, 2019, 5:24 PM IST
இன்ஸ்டாகிராமில் ‘ஹேக்கிங் பக்’ ஒன்று இருந்தத்தைக் கண்டறிந்த தமிழர் ஒருவருக்கு அந்நிறுவனம் 20 லட்சம் ரூபாயை பரிசாக அளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் லக்‌ஷ்மன் முத்தையா. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஃபோட்டோ ஷேரிங் ஆப் ஆன இன்ஸ்டாகிராமில் ஒருவரின் அனுமதி இன்றி அவரது கணக்கை ஹேக் செய்ய முடியும் என்பதற்கான வாய்ப்பு உள்ளதைக் கண்டறிந்தார்.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவினரிடம் தன்னிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் புகார் அளித்தார். முதலில் போதிய தரவுகள் இல்லாத காரணத்தால் அவரது தெளிவுரையை ஃபேஸ்புக் ஏற்க மறுத்துள்ளது. இதன் பின்னர் லக்‌ஷ்மன் போதிய விவரங்களைத் திரட்டி தொடர்ச்சியாக மெயில் மூலமாகவும் வீடியோக்கள் மூலமாகவும் விளக்கியுள்ளார்.


சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பயனாளர் ஒருவரின் கணக்கை ஹேக் செய்வதற்கான ‘பக்’ உள்ளதை அறிந்து தகவல் கொடுத்ததற்காக லக்‌ஷ்மனுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டது. தற்போது இன்ஸ்டாகிராமில் இத்தவறு சரி செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: இந்தியாவுக்காக விலையைக் குறைக்கும் நெட்ஃப்ளிக்ஸ்..!
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...