ரத்த தானத்தை ஊக்குவிக்க ஃபேஸ்புக் உடன் தமிழக அரசு கூட்டணி!

ஃபேஸ்புக் தளத்தில் மட்டும் சுமார் 22 மில்லியன் இந்திய மக்கள் தங்களது ரத்தப் பிரிவைப் பகிர்ந்து ரத்த தானம் அளிக்க ஆர்வமிருப்பதாகவும் பதிவு செய்துள்ளனர்.

ரத்த தானத்தை ஊக்குவிக்க ஃபேஸ்புக் உடன் தமிழக அரசு கூட்டணி!
ஃபேஸ்புக்
  • News18
  • Last Updated: October 3, 2019, 3:59 PM IST
  • Share this:
ரத்த தானத்தை ஊக்குவிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளும் ஃபேஸ்புக் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரத்த தானம் செய்ய விரும்புபவர்களை ஊக்குவிக்க சமூக வலைதளங்கள் உதவும் என நம்புவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் தளத்தில் ‘ரத்த தானம்’ என்னும் அம்சம் மூலம் ரத்த தானம் செய்ய முன்வரும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு ரத்த வங்கிகள், மருத்துவமனைகள் என அனைத்தும் இனி ஃபேஸ்புக் blood donation அம்சத்தைப் பயன்படுத்தும். ஃபேஸ்புக் தளத்தில் மட்டும் சுமார் 22 மில்லியன் இந்திய மக்கள் தங்களது ரத்தப் பிரிவைப் பகிர்ந்து ரத்த தானம் அளிக்க ஆர்வமிருப்பதாகவும் பதிவு செய்துள்ளனர்.


இதுகுறித்து தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், “மிகவும் எளிதான, வேகமான சேவையை ஃபேஸ்புக் மூலம் பெற முடியும் என நம்புகிறோம். மிகவும் அரிதான ரத்த மாதிரிகளைக் கூட பெற ஃபேஸ்புக் அம்சம் உதவும்” என்றார்.

ஃபேஸ்புக் இந்தியா இயக்குநர் மனிஷ் சோப்ரா கூறுகையில், “எங்களது ரத்த தானம் என்னும் அம்சம் மூலம் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றுவது எங்களது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அனைத்து ரத்த வங்கிகளையும் ரத்த தானம் செய்ய விரும்புவர்களையும் இணைக்க உதவும் கருவியாகவே இருக்கிறது” என்றார்.

மேலும் பார்க்க: இந்தியர்கள் வாங்க விரும்பும் போன் எது? தேசிய அளவிலான சர்வே முடிவுகள் வெளியீடு!வருமான வரித்துறையில் வேலை என்று ரூ.60 லட்சம் மோசடி!
First published: October 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்