நோ சொன்ன இந்தியா... வெல்கம் கொடுத்த ஜப்பான்... ’உலகின் முதல் கண்டுபிடிப்பு’ மார்தட்டும் தமிழன்

இந்தியாவில் உள்ள பல தயாரிப்பு நிறுவனங்களை நாடினேன், ஆனால் யாரும் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதனால் தான் ஜப்பான் அரசாங்க பார்வைக்கு எடுத்து சென்றேன்.

Vijay R | news18
Updated: May 11, 2019, 10:56 PM IST
நோ சொன்ன இந்தியா... வெல்கம் கொடுத்த ஜப்பான்... ’உலகின் முதல் கண்டுபிடிப்பு’ மார்தட்டும் தமிழன்
சவுந்திரராஜன் குமராசாமி
Vijay R | news18
Updated: May 11, 2019, 10:56 PM IST
தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் 10 வருட கடின உழைப்பிற்கு பின் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான தண்ணீரில் இயங்கக்கூடிய தனித்துவமான இயந்திரத்தைத் தயாரித்துள்ளார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் பொறியாளர் சவுந்திரராஜன் குமராசாமி. இவர் உருவாக்கி உள்ள இயந்திரத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கெண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரில் இயங்குவது இந்த இயந்திரத்தின் சிறப்பு அம்சமாக உள்ளது.

சவுந்திரராஜன் குமராசாமிஇது தொடர்பாக அவர் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ’உலகத்திலேயே இது மாதிரியான கண்டுபிடிப்புகளில் இதுவே முதன் முறையானது. இந்த இயந்திரத்தை உருவாக்க பத்து வருடங்கள் தேவைப்பட்டது. இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கெண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும்.

இந்தியாவில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எனது கனவு. இந்தியாவில் உள்ள பல தயாரிப்பு நிறுவனங்களை நாடினேன், ஆனால் யாரும் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதனால் தான் ஜப்பான் அரசாங்க பார்வைக்கு எடுத்து சென்றேன். அங்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த இயந்திரம் ஜப்பானில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என நம்புகிறேன்’ என சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Also Watch

Loading...

First published: May 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...