• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் யூட்யூபர் ஓய்வு அறிவிப்பு..!

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் யூட்யூபர் ஓய்வு அறிவிப்பு..!

ப்யூடைபை

ப்யூடைபை

ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடுவதை தனது தளத்தில் ஒளிபரப்பு செய்வார் ஃபெலிக்ஸ்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உலக அளவில் யூட்யூப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் ’யூட்யூபர் ’ தான் யூட்யூப் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

    30 வயதான ஃபெலிக்ஸ் ஜெல்பெர்க் ‘ப்யூடைபை’ என்னும் யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார். சுமார் 102 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உடன் உலகின் நம்பர் 1 யூட்யூப் சேனலாக இருந்துவந்த இவரது சேனலை சமீபத்தில் இந்திய ஆல்பம் சேனலான டி-சீரிஸ் முந்தியது.

    ஆனால், தனி ஒரு நபராக யூட்யூப் தளத்தில் அதிகம் சம்பாதித்தவராக அறியப்படுகிறார் ‘ப்யூடைபை’ ஃபெலிக்ஸ். இவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “2020-ம் ஆண்டில் யூட்யூப் தளத்திலிருந்து இடைவேளை எடுக்கிறேன். ஓய்வு பெற விரும்புகிறேன். மிகவும் சோர்வாக உணர்கிறேன்” என்றுள்ளார்.

    ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடுவதை தனது தளத்தில் ஒளிபரப்பு செய்வார் ஃபெலிக்ஸ். வீடியோ கேமிங் மூலமாக மட்டுமே சர்வதேச அளவில் மிகப்பெரும் பிரபலமாக வளர்ந்தார் ஃபெலிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பார்க்க: உங்கள் மொபைல் எண்ணை வேறு டெலிகாம் நிறுவனத்துக்கு 48 மணி நேரத்தில் மாற்றலாம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: