முன்பெல்லாம் பெரியவர்கள் வேடிக்கையாக ஒன்றை சொல்வது உண்டு. பட்டனை தட்டி விட்டால் தட்டில் சாப்பாடு வந்து விடுமா? என்று கேட்பார்கள். அப்போதைய சூழலில் சோம்பேறித்தனத்தை கண்டிப்பதற்கான வசனமாக இது இருந்தது. ஆனால், காலப்போக்கில் இது உண்மையானது என்றே சொல்லலாம்.
ஆமாம், நமது ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள டிஜிட்டல் பட்டனை தட்டி விட்டால் போதும், அடுத்த சில நிமிடங்களில் சுடச்சுட உணவும் நம் வீட்டின் வாசலுக்கு வந்து நிற்கிறது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களால் இது சாத்தியமானது. இந்த ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் எப்படி தடம் பதிக்க முடிந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
பொதுவாக நாளொன்றுக்கு மூன்று வேளையும் நமக்கு உணவு தேவைப்படுகிறது. எல்லோரும் வீட்டில் சமைத்துக் கொள்வது தான் வழக்கம்.
வீட்டில் சமைக்க முடியாத சூழல் அல்லது ஏதேனும் புதிய சுவையில் சாப்பிட வேண்டும் என்ற தேடல் தான் ஹோட்டல் உணவுகளை நோக்கி நம்மை நகர்த்துகின்றன.
குறிப்பாக, வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள், மதிய உணவு எடுத்துச் செல்லாமல் அலுவலகம் செல்பவர்கள், ஏதேதோ தேவைகளுக்காக வெளியிடங்களுக்கு வருபவர்கள் போன்றோருக்கும் ஹோட்டல் உணவு அவசியமாகிறது.
யாருக்கு தேவையோ அவர்கள் நேரடியாக ஹோட்டல்களுக்கு சென்று வாங்கிச் சாப்பிடுவது அல்லது பார்சல் வாங்கி வந்து இருப்பிடத்தில் வைத்து சாப்பிடுவது என்பதே வழக்கமானதாக இருந்தது.
இந்த இடத்தில் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் நுழைகின்றன. அதாவது நேரடியாக ஹோட்டல்களுக்கு சென்று பார்சல் வாங்குவதற்கு கூட நேரமில்லாத வகையில் இன்றைய உலகம் துரிதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
நமது பிசியான வேலைகளுக்கு இடையே ஹோட்டல் வரை சென்று வருவது கடினமாக இருக்கிறது. மேலும், உடல்நிலை சரியில்லாதவர்களும் கூட நேரடியாக செல்ல முடியாத சூழல் இருக்கிறது.
தடம் பதித்த ஸ்விக்கி, சொமேட்டோ
இருக்கும் இடத்திற்கே உணவு தேடி வரும் என்ற அடிப்படையில் ஸ்விக்கி, சொமேட்டா ஆகிய இந்திய நிறுவனங்கள் களமிறங்கின. அதேபோல ஊபர் ஈட்ஸ், ஃபுட்பாண்டா என எத்தனையோ டெலிவரி நிறுவனங்கள் வந்திருந்தாலும் ஸ்விக்கி, சொமேட்டா ஆகிய நிறுவனங்கள் தான் இந்தியாவில் அதிகப்படியான பிசினஸ்களை செய்து வருகின்றன.
இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவிலான தரவரிசைப் பட்டியலிலும் இந்த நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. உணவு டெலிவரி மட்டுமல்லாமல் மளிகை பொருள் டெலிவரி, சில்லறை பொருள்களின் டெலிவரி என பல வேலைகளை இந்நிறுவனங்கள் செய்து வருகின்றன.
தரவரிசையில் எத்தனையாவது இடம்
கனடாவைச் சேர்ந்த இடிசி என்ற குழுமம் சார்பில், உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஸ்விக்கி 9ஆம் இடத்திலும், சொமேட்டோ 10ஆம் இடத்திலும் உள்ளது. சீனாவின் மெய்டுவான் நிறுவனம் முதல் இடத்திலும், பிரிட்டனின் டெலிவெரோ நிறுவனம் இரண்டாம் இடத்திலும், அமெரிக்காவின் ஊபர் ஈட்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
Read More: விண்ணில் பாய உள்ள சென்னை ஐஐடியின் அக்னி பான் ராக்கெட்..!
முன்னதாக 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனமான பிலிங்கிட் நிறுவனத்தை ரு.4,475 கோடிக்கு கையகப்படுத்த சொமேட்டோ முடிவு செய்தது. அதே சமயம், கிளவுட் கிச்சன், மளிகை பொருள் டெலிவரி என்று ஸ்விக்கி தனது வியாபாரத்தை விரிவுபடுத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.