சின்னச் சின்ன சில்லரை வேலைகளுக்கு இனி ‘ஸ்விகி கோ’..!

வருகிற 2020-ம் ஆண்டுக்குள் இந்த சேவை நாடு முழுவதும் உள்ள 300 நகரங்களில் செயல்பட உள்ளது.

Web Desk | news18
Updated: September 4, 2019, 9:40 PM IST
சின்னச் சின்ன சில்லரை வேலைகளுக்கு இனி ‘ஸ்விகி கோ’..!
ஸ்விகி
Web Desk | news18
Updated: September 4, 2019, 9:40 PM IST
உங்களுக்குத் தேவையான அத்தனை சில்லரை வேலைகளையும் செய்யத் தயார் என புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஸ்விகி.

உணவு டெலிவரி ஆப் ஆன ‘ஸ்விகி’ புதிதாக ‘ஸ்விகி கோ’ என்றதொரு சேவை ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. உங்கள் நகருக்குள் ஏதாவது பார்சல் அனுப்ப வேண்டுமா, உங்கள் துணையின் அலுவலகத்துக்கு சாப்பாடு கொடுத்துவிட வேண்டுமா, இரண்டு தெரு தள்ளியிருக்கும் அயர்ன் கடையில் துணி கொடுக்க வேண்டுமா? அத்தனை சில்லரை வெளி வேலைகளையும் செய்ய வருகிறது ‘ஸ்விகி கோ’.

பிக் அப் மற்றும் ட்ராப் சேவை என அறிமுகம் செய்துகொள்ளும் ‘ஸ்விகி கோ’ முதலில் இத்திட்டத்தை பெங்களூரு நகரில் அறிமுகம் செய்ய உள்ளது. வருகிற 2020-ம் ஆண்டுக்குள் இந்த சேவை நாடு முழுவதும் உள்ள 300 நகரங்களில் செயல்பட உள்ளது. மேலும், ’ஸ்விகி ஸ்டோர்ஸ்’ என்னும் சேவை மூலம் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், மருந்து, பூ என உங்களுக்குத் தேவையான அத்தனையும் கிடைக்கும் வகையில் தயாராகி வருகிறது.


ஸ்விகி கோ சேவை பெங்களூருக்கு அடுத்ததாக ஹைதராபாத் நகரிலும் செயல்பட உள்ளது. இதற்காக பெங்களூரு நகரில் சுமார் 300 உள்ளூர் வணிகர்கள் உடனும் 200 ஹைதராபாத் நகர வணிகர்கள் உடனும் ஸ்விகி ஒப்பந்தமிட்டுள்ளது.

மேலும் பார்க்க: அஜித்தின் ரீமேக் படங்கள் ஒரு பார்வை
First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...