வீட்டு சாப்பாடு வழங்க புதிய ஆப்! ஸ்விகியின் அசத்தல் அறிமுகம்

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் அவர்களுக்கான வீட்டு சாப்பாடு டெலிவரி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: June 3, 2019, 4:42 PM IST
வீட்டு சாப்பாடு வழங்க புதிய ஆப்! ஸ்விகியின் அசத்தல் அறிமுகம்
ஸ்விகி டெய்லி
Web Desk | news18
Updated: June 3, 2019, 4:42 PM IST
வீட்டு சாப்பாடு விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு என்றே புதிதாக ‘ஸ்விகி டெய்லி’ என்ற ஆப் ஒன்றை ஸ்விகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

’டெய்லி ஸ்விகி’ என்ற இந்த புதிய ஆப் வீட்டு சாப்பாட்டின் சுவை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று ஹரியானாவின் குருகிராம் நகரில் மட்டுமே இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்த சில நாள்களிலேயே இந்த சேவை பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்கு விரிவு செய்யப்பட உள்ளது. சிறு வியாபாரிகள், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் எனப் பலருக்கும் இந்த ஆப் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.


சப்ஸ்க்ரைப் செய்து உங்களுக்கு எந்த மாதிரியான எந்த வகைகள் எல்லாம் நிறைந்த சாப்பாடு வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். ஒரு நேரத்துக்கு என்றாலும் ஒரு மாதத்துக்கு என்றாலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் அவர்களுக்கான வீட்டுச் சாப்பாடு டெலிவரி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ராபர்ட் வதேரா வெளிநாடு செல்லலாம்... ஆனால் லண்டனுக்கு போகக் கூடாது...!
First published: June 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...