• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • தீபாவளி வெளியீடாக ஜியோ போன் நெக்ஸ்ட்  ஸ்மார்ட்போன்

தீபாவளி வெளியீடாக ஜியோ போன் நெக்ஸ்ட்  ஸ்மார்ட்போன்

Jio phone next

Jio phone next

'மேட் ஃபார் இந்தியா' என்கிற திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் கிடைக்க கூடிய ஸ்மார்ட்போனை ரிலையன்ஸ் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் சேர்ந்து உருவாக்க திட்டமிட்டிருந்தனர்.

  • Share this:
ஜியோ மொபைல்கள் வந்த பிறகு எளிய மக்களின் கைகளிலும் இன்டர்நெட் சென்று சேர்ந்தது. அந்த வகையில் ஜியோ மொபைலின் அடுத்த பரிணாமமாக 'ஜியோ போன் நெக்ஸ்ட்' என்கிற புதிய மொபைல் இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

பல்வேறு புதிய அம்சத்துடன் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மொபைல் இந்தியாவை அடுத்தகட்ட டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு கொண்டு செல்லும் எனவும், பல்வேறு சிறந்த வசதிகள் இதில் கொண்டு வரப்பட்டுள்ளதாக என தெரிவித்துள்ளார்.

'மேட் ஃபார் இந்தியா' என்கிற திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் கிடைக்க கூடிய ஸ்மார்ட்போனை ரிலையன்ஸ் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் சேர்ந்து உருவாக்க திட்டமிட்டிருந்தனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மக்கள் பலவித அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கின்றனர். இதன் காரணமாக, எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் பல இந்திய மொழிகள் அடங்கிய தரமான ஸ்மார்ட்போனை சந்தைக்கு கொண்டு வருவது பற்றி சுந்தர் பிச்சை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Also read:  மது, குட்கா போல போதை பொருட்களை வரி செலுத்தி மக்கள் பயன்படுத்த அனுமதி தேவை – காங்கிரஸ் எம்.பி யோசனை

மேலும் முதல் முறையாக இன்டர்நெட்டை பயன்படுத்தும் புதிய யூசர்களின் எண்ணிக்கை இந்த ஸ்மார்ட்போன் மூலம் சாத்தியப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த 3-5 வருடங்களில் இந்திய மக்களிடையில் பலவித எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன; இதுப்போன்ற சிறந்த புதிய அம்சங்கள் கொண்ட மொபைல்களுக்கு எப்போதும் இந்தியச் சந்தையில் வரவேற்பு அதிகமாக இருக்கும். இந்த அறிமுகம் அடுத்தகட்ட டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு இந்தியாவை கொண்டு செல்ல உதவும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே எங்களின் வருங்கால திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில் சுந்தர் பிச்சை பேசினார்.

இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனிற்கு ஏற்ற வகையில் இதன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கூகுளின் குழு வடிவமைத்துள்ளது. இந்திய மக்கள் அவரவர் மொழிகளில், எளிமையான முறையில், குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

Also read:   ஷாருக் மகனை கைது செய்த சமீர் வான்கடே இந்து மதத்தைச் சேர்ந்தவரல்ல – அம்பலப்படுத்திய முதல் மனைவியின் தந்தை

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட்டின் சிறப்பம்சங்கள் குறித்து ஜியோ நிறுவனம் இந்த வார தொடக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில், "மேட் இன் இந்தியா, மேட் ஃபார் இந்தியா மற்றும் மேட் பை இந்தியன்ஸ்" என்கிற திட்டத்தை கொண்டே இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும் எல்லா இந்தியர்களுக்கும் டிஜிட்டல் தொழிற்நுட்பம் சார்ந்த வாய்ப்புகள் சமமாக கொண்டு சேர வேண்டும் என்கிற முக்கிய நோக்கில் இதை தயாரித்துள்ளதாக கூறியது. இதன் விளம்பர டீஸர் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 13 மெகா பிக்சல் கேமராவை குறிப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Also read:  சேலை கட்டி, நெற்றியில் பொட்டு வைத்து வீதியில் மிடுக்காக நடை போட்ட ஆண் – இப்ப இது தான் ட்ரெண்ட்

மேலும் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட்டில் பிரகதி ஆண்ட்ராய்டு இயங்குதளம் தரப்பட்டுள்ளது. குறைந்த விலையில் நிறைவான அனுபவத்தை பெற ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் சேர்ந்தே இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வடிவமைத்துள்ளனர். மேலும் சிறந்த செயல்திறன், ஆடியோ, பேட்டரி போன்றவற்றை கருத்தில் கொண்டு இதில் குவால்காம் ப்ராசசர் இதில் பொறுத்தப்பட்டுள்ளது என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: