முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / விண்கல்லை எரித்துச் சாம்பலாக்கிய சூரியன்!

விண்கல்லை எரித்துச் சாம்பலாக்கிய சூரியன்!

சூரிய வெப்பத்தில் எரிந்த விண்கல்

சூரிய வெப்பத்தில் எரிந்த விண்கல்

Sun burns 323p near-sun comet : சூரியனுக்கு அருகே சென்ற விண்கல்லை தன வெப்ப அலைகளால் எரித்துச் சாம்பலாக்கிய சூரியன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சூரிய குடும்பத்தில் சூரியன், 8 கோள்கள் தவிர்த்து மற்ற விண்கல்,பாறைகள், தூசிகள் கூட சூரியனை சுற்றிக்கொண்டு தான் இருக்கும். சூரியனின் ஈர்ப்பு விசை அதன் மேல் இருக்கும் வரை அது சூரிய குடும்பத்தின் உறுப்பினரே. அப்படியான ஒரு சூரிய குடும்ப உறுப்பினரை சூரியனே தன் வெப்பத்தால் கொன்றுவிட்டது என்று சொன்னால் நம்புவீர்களா?

சூரியனுக்கு அருகிலேயே சில விண்கற்கள் அதைச் சுற்றிக்கொண்டு இருக்கும். அதற்கு near sun comet என்று பெயர். கூட்டம் கூட்டமாக காணப்படும் இந்த கற்களில் இதுவரை 2 விண்கற்களை மட்டுமே பூமியின் மக்கள் கண்டுபிடித்திருந்தனர். அவற்றிற்கு பெயர்களை வைத்து ஆண்டுக்கணக்கில் அதன் செயல்பாடுகளை கவனித்து பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் 323P/SOHO.

தொலைதூர ட்ரோன் சோதனைகளைத் தொடங்குகிறது இந்தியா!

 நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் இணைந்து சூரியன் மற்றும் சூரியமண்டலத்தை கண்காணிப்பதற்காக நிறுவப்பட்ட  சோஹோ (SOHO)ஆய்வகத்தின் மூலம் 1999 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனுக்கு அருகில் சுற்றும் அறிய வகை விண்கல்லான இதன் தன்மையை ஆய்வு செய்து வந்தனர். தூரத்தில் ஒரு கல் அசைவதைபோல் தெரியும்.

2020 டிசம்பர் மாதம் முதல் சுபாரு தொலைநோக்கி இதன் விசித்திர செயல்பாடுகளை கண்காணித்து வந்தது. சில நாட்களுக்கு முன் இது தான் சுற்றி வந்த வட்டத்தில் இருந்து விலகி சூரியனுக்கு மேலும் அருகே சென்றது. சூரியனின் மிகுதியான வெப்ப அலைகளால் இந்த விண்கல் எரிய ஆரம்பித்து நிறம் மாறத்தொடங்கியது. 

தன் இயல்பான சுழற்சி வேகத்தில் இருந்து பன்மடங்காகப் பெருகி அரை மணி நேரத்திற்கு ஒரு சுழற்சி என்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. பின் அந்த விண்கல்லில் உள்ள எரிந்த பொருட்கள் எல்லாம் அதை விட்டு விலகி அண்டத்தில் கலக்கும் செயல் அந்த விண்கல்லுக்கு வால் முளைத்தது போல் தெரிந்துள்ளது. 

ர்யுகு சிறுகோளில் உயிர்களுக்கான சாத்தியக்கூறு! -ஜாக்ஸா ஆய்வு

சிறிது நேரத்தில் அந்த விண்கல் இருந்த தடயமே இல்லாமல் போய்விட்டது.இந்த நிகழ்வுகளை எல்லாம் ஹபிள் தொலைநோக்கி பதிவிட்டு பூமிக்கு அனுப்பியுள்ளது. இப்படித்தான் சூரியனைச் சுற்றி இருந்த  விண்கற்கள் திடீரென மறைந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் யூகிக்கத் தொடங்கியுள்ளனர்.

First published:

Tags: Astronomy, NASA, Space, Sun