முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / அசத்தலான செல்ஃபிக்கள் மற்றும் பிரமிக்கவைக்கும் டிசைன் உடன் வரும் vivo-ன் புதிய மாடல்

அசத்தலான செல்ஃபிக்கள் மற்றும் பிரமிக்கவைக்கும் டிசைன் உடன் வரும் vivo-ன் புதிய மாடல்

காட்சி படம்

காட்சி படம்

இந்த புதிய vivo ஸ்மார்ட் போனில் பல அமசங்கள் உள்ளது. அதை தெரிந்துக்கொள்ள இதை படியுங்கள்..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதன் 44 MP செல்ஃபி கேமராவின் விவரக்குறிப்புகளைப் பற்றி அறியும் முன்பே, இந்த V23e நம்மை பிரமிக்கச் செய்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். 7.32 mm அளவுள்ள இது மிகவும் நேர்த்தியான போன்களில் ஒன்றாகும், மேலும் அதன் அட்டகாசமான மேற்பரப்பு ஃபினிஷ் அதை மேலும் சிறப்பாக்குகிறது.தட்டையான ஃப்ரேமில் ஒளிஊடுருவக்கூடிய மெட்டாலிக் ஃபினிஷ் மற்றும் அதன் மேற்பரப்பு கோட்டிங் உடன் பரப்பப்பட்ட ஃப்ளூரைட் AG கிளாஸ் ஒரு அற்புதமான தோற்றத்தை வழங்குகிறது. போனின் MRP விலையை விட 2-3 மடங்கு பணம் செலுத்தி மக்கள் இதை வாங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கண் கவரும் செல்ஃபிக்கள்போனின் வடிவமைப்பிற்குப் பிறகு, நம் கவனத்தை அதிகம் ஈர்ப்பது கேமராக்கள்தான். Vivo எப்போதும் சிறந்த செல்ஃபி கேமராக்களை வழங்குகிறது, எனவே vivo V23e 5G அதற்கு விதிவிலக்கல்ல. முன்பக்க கேமராவானது மான்ஸ்டர் 44 MP F2.0 யூனிட் கொண்டது, மேலும் ஐ AF மற்றும் AI-உதவி கண்காணிப்பு மற்றும் படத்தை மேம்படுத்தும் அம்சங்களுடன் வருகிறது.

மற்ற பல கேமராக்கள் இரவில் நாம் விரும்பும் வகையில் படம்பிடிப்பதில்லை, இதில் AI எக்ஸ்ட்ரீம் நைட் பயன்முறை உள்ளது, இது உங்கள் அம்சங்களை அடையாளம் காணவும் மேம்படுத்தவும் மல்டி-ஃபிரேம் மெர்ஜிங்கைப் பயன்படுத்துகிறது. இப்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது முன்பக்க கேமரா அம்சங்களைப் பற்றி மட்டுமே, பின்பக்க கேமராவை பற்றி அல்ல.

ஐ டிராக்கிங் என்பது குறிப்பாக நம்மை ஈர்க்கக்கூடியது, அதேசமயம் முக்கியமானதும்கூட, ஏனென்றால் எந்தவொரு போர்ட்ரைட் புகைப்படக் கலைஞரும் உங்களுக்குச் சொல்வதைப் போல, எந்தவொரு போர்ட்ரைட்டுக்கும் கண்களை ஃபோகஸ் செய்வது என்பது மிகவும் முக்கியமானது. vivo V23e 5G ஆனது 'ஸ்டெடிஃபேஸ் செல்ஃபி வீடியோ'வைக் கொண்டுள்ளது, இது உங்கள் முகத்தை கேமரா லாக்கிங் ஃபோகஸ் செய்து, அதைச் சுற்றி செல்ஃபி வீடியோவை ஸ்டெபிலைஸ் செய்கிறது. இது vlogs மற்றும் Insta Stories போன்றவற்றிற்குச் சிறந்தது.

ட்ரிபிள் கேமரா அரே

பின்பக்க கேமராக்களும் நம் கவனத்தை ஈர்ப்பதில் மிக முக்கியமானவை. ஒரு நேர்த்தியான கேமரா ஐலேண்டில் பொருத்தப்பட்ட, அரேவில் 50 MP F1.8 பிரைமரி கேமரா, 8 MP F2.2 120° சூப்பர் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 MP F2.4 மேக்ரோ ஆகியவை உள்ளன.

டெக்ஸ்ச்சர் விவரங்களைப் பராமரிக்க உதவும் மேம்படுத்தப்பட்ட இரவுப் பயன்முறை, vivoவின் சிக்னேச்சர் பொக்கே ஃபிளேர் போர்ட்ரை மோட், டபுள் எக்ஸ்போஷர் மற்றும் பல அம்சங்கள் நமது அனுபவங்களை மேம்படுத்த காத்திருக்கின்றன.

8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் உடன் MediaTek Dimensity 810 SoC இந்த அழகான போனை இயக்குகிறது. 44 W FlashCharge ஆதரவுடன் 4,050 mAh பேட்டரி சேர்க்கப்பட்டுள்ளது, இது 30 நிமிடங்களில் 1-67% வரையிலான சார்ஜிங்கை வழங்கும்.

டிஸ்பிளேவின் அளவு 6.44 இன்ச்கள் ஆகும் மற்றும் இது 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 ppi உடன் கூடிய AMOLED பேனல் ஆகும். ஒரு அழகிய இரவு நேர வானத்தின் நிறத்தினால் ஈர்க்கப்பட்ட, அழகிய அடர்ந்த நீல நிறத்தைக் கொண்டுள்ளது.

மெல்லிய மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு

இரண்டு நிறங்களில் கிடைக்கின்றன - அவை முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களை வழங்கும் பிரமிப்பூட்டும் சன்ஷைன் கோல்ட் மற்றும் மிட்நைட் ப்ளூ. சன்ஷைன் கோல்ட் ஒரு மென்மையான தொடுவுணர்வைத் தரும் டெக்ஸ்ச்சரையும் மற்றும் இதமூட்டும் மிருதுவான ரிஃப்லெக்டிங் மேற்பரப்பையும் கொண்டுள்ளது. மறுபுறம், மிட்நைட் ப்ளூ மிகவும் மென்மையாகவும் கையில் வைத்திருப்பதற்கு தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.

மென்மையான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் ஈர்க்கக்கூடிய கேமரா அம்சங்களுடன், vivo V23e இந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த தேர்வாகும். நீங்கள் இது போன்ற ஒன்றை வாங்க விரும்பினால், இனிமேலும் காத்திருக்காதீர்! இந்த போன் தற்போது 8/128 GB கான்ஃபிகரேஷனுடன் ரூ.25,990க்கு கிடைக்கிறது.

First published:

Tags: Smart Phone, VIVO