சந்திராயன்-2 மீண்டும் விண்ணில் ஏவப்படும்: மாணவர்கள் நம்பிக்கை!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ஐ காண ஆவலுடன் உள்ளதாக இஸ்ரோ மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Web Desk | news18
Updated: July 15, 2019, 7:52 AM IST
சந்திராயன்-2 மீண்டும் விண்ணில் ஏவப்படும்: மாணவர்கள் நம்பிக்கை!
சந்திரயான் 2
Web Desk | news18
Updated: July 15, 2019, 7:52 AM IST
சந்திரயான்-2 விண்கலம் திடீரென தற்காலிகமாக விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டதால் சதிஷ் தவாண் ஏவுதளத்தில் விண்கலம் ஏவுவதை நேரில் காண வந்திருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம், விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகள் சரிசெய்து மீண்டும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தெலங்கானா மாணவி கூறுகையில்,  ”சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவுவதை காண நிறைய நபர்கள் வந்தனர். ஆனால், விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வருத்தப்படவில்லை. ஏனென்றால் இந்தியாவின் பெருமையே விஞ்ஞானிகள்தான். சந்திராயன் 2-இல் ஏதாவது பிரச்னை இருந்தால் நாம் அதனை சரிசெய்துவிட்டு மீண்டும் விண்ணிற்கு ஏவலாம்.  இது தோல்வியல்ல” என்றார்.

தெலுங்கானா மாணவிமற்றொரு மாணவி சோபியா கூறுகையில், ”நமது விஞ்ஞானிகள் தொழில்நுட்ப கோளாறை விரைவில் சரி செய்வார்கள். இந்த நிலை வருத்தமானது அல்ல. தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகள் சரிசெய்ய ஒரு மாதம் வரை ஆகலாம். அதற்கு பின் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ஐ காண ஆவலுடன் உள்ளோம்” என  நம்பிக்கை தெரிவித்தார்.

Also See... இதுவரை யாரும் நெருங்காதப் பகுதிகளை சந்திராயன் - 2 ஆய்வு செய்யும்: இஸ்ரோ சிவன்


Loading...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...