ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இன்று தோன்றவுள்ள ஸ்ட்ராபெரி நிலவு பற்றி தெரியுமா?

இன்று தோன்றவுள்ள ஸ்ட்ராபெரி நிலவு பற்றி தெரியுமா?

ஸ்ட்ராபெரி நிலவு

ஸ்ட்ராபெரி நிலவு

Strawberry moon: அமெரிக்காவின் ஸ்ட்ராபெரி அறுவடைக் காலத்தில் உதிக்கும் முழு நிலவிற்கு ஸ்ட்ராபெரி நிலவென்று பெயர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஸ்ட்ராபெரி நிலவு என்றவுடன் ஸ்ட்ராபெரி உருவத்திலோ அல்லது ஸ்ட்ராபெரி நிறத்திலோ இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். அமெரிக்க நாட்டில் ஜூன் மாதம் ஸ்ட்ராபெரி பழங்களின் அறுவடைக் காலம். ஸ்ட்ராபெரிக்களை அறுவடை செய்யும் போது வரும் முழு நிலவிற்கு ஸ்ட்ராபெரி நிலவு என்று பொருள். அமெரிக்க பழங்குடிகளான அல்கோன்குயின், ஓஜிப்வே, டகோட்டா மற்றும் லகோட்டா மக்களால் இப்பெயர் கொண்டு வழங்கப்படுகிறது.

ஸ்ட்ராபெரி நிலவு இன்று( ஜூன் 14 ஆம் தேதி)  உலக மக்களுக்குக் காட்சி அளிக்க உள்ளது. கிழக்குப் பகல் நேரப்படி இன்று காலை 7.51 மணிக்கு  (இந்திய நேரப்படி மாலை 5.22 மணி IST) சந்திரன் பூமியைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையில் பெரிஜி(perigee) எனப்படும் பூமிக்கு மிக அருகில் உள்ள இடத்தில்  அமைந்திருக்கும். இது பூமியிலிருந்து 2,22,238 மைல்கள் தூரத்தில் அமைந்திருக்கும். இது நிலவின் சராசரி தூரத்தை விட சுமார் 16,000 மைல்கள் குறைவு. 

பூமியின் மிக அருகில் இருப்பதால் பூமியில் உள்ள மக்களுக்கு நிலவு எப்பொழுதும் இருப்பதாய் விட பிரகாசமாகவும் பெரியதாகவும் தோன்றும். இதனால்  நிலவை சூப்பர் மூன் என்று அழைப்பர். வானம் தெளிவாக இருந்தால் இந்த காட்சி கண்ணைக் கவர்ந்து விடும். இன்றைய ஸ்ட்ராபெரி நிலவு வழக்கமான முழு நிலவை விட 10 சதவீதம் பிரகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டின் மிகத் தாழ்ந்த நிலவு

space.com கூற்றின் இன் படி, இந்த 2022 ஆண்டின் மிகத் தாழ்ந்த முழு நிலவாக இது இருக்கும். இது அடிவானத்திலிருந்து 23.3 டிகிரி கோணத்தில் உதிக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. 

பொதுவாக ஜூன் 21 ஆம் தேதி பூமியின் வாடா துருவத்திற்கு  மிக நீண்ட சூரிய ஒளி உள்ள நாளாக இருக்கும். இதை சம்மர் சால்ஸ்டாய்ஸ் (summer solstice) என்பர். தென்துருவத்திற்கு நீண்ட இருளாக இருக்கும். இந்த நாளில் பூமியின் கடகரேகைக்கு மேல் சூரியன் உதிக்கும். அதாவது 23.4 டிகிரி மேல் சூரியன் உதிக்கும். அதற்கு எதிரே நிலவு உதிப்பதால் பூமிக்கு மிக அருகிலேயே உதிப்பது போல் இருக்கும்.

உலகின் முதல் திரவக் கண்ணாடி தொலைநோக்கி இந்தியாவில் இருக்கிறது தெரியுமா?

தொலைநோக்கியைப் பயன்படுத்தி நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் மற்றும் மலைகளைக் கண்டறிய இது மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பளிக்கும் என்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறியது. 

First published:

Tags: Moon, Science, Super Moon