Home /News /technology /

இனி இணைய பாதுகாப்புக்கு பாஸ்வேர்டுகள் வேண்டாம்... இதோ மாற்று வழி

இனி இணைய பாதுகாப்புக்கு பாஸ்வேர்டுகள் வேண்டாம்... இதோ மாற்று வழி

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

பெரும்பாலான ஆன்லைன் ஹேக்குகளுக்கு காரணமாக இருப்பது பலவீனமான அல்லது எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய பாஸ்வேர்டுகள் தான்.

இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, மின்னஞ்சல் ஐடி முதல், ஆன்லைன் ஷாப்பிங் லாகின் வரை சரியான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது அவசியம். ஆனால், சில பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால், பெருகி வரும் ஹேக்கர்கள் அச்சுறுத்தல் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வேண்டி, பாஸ்வேர்டு பயன்படுத்துவது மட்டும் போதாது என்று கூடுதலாக OTP வழியே லாகின் செய்வதை உறுதிப்படுத்தும் செயல்பாடும் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டன. ஆனால், இனி பாஸ்வேர்டு இல்லாமலே பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தலாம்.

ஒரு லாகின் கணக்கு அல்லது மின்னஞ்சலுக்கு பாஸ்வேர்டு உருவாக்குவது கடினமானது. உங்களைப் பற்றிய ஒவ்வொரு தகவலும், வங்கிக்கணக்கு முதல் வேலை சம்மந்தப்பட்ட விஷயங்கள் வரை, நீங்கள் என்ன தயாரிப்புகளை வாங்குகிறீர்கள், உங்கள் ஷாப்பிங் மற்றும் இணையத்தள பயன்பாடு வரலாறு, என்று ஆன்லைன் இயங்குவதற்கு பெரும்பாலும் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு அவசியம். அது மட்டுமின்றி, ஒவ்வொரு தளம் மற்றும் லாகின் கணக்கிற்கும் ஒவ்வொரு பாஸ்வேர்டு தேவைப்படுகிறது. ஒரே பாஸ்வேர்டை எல்லா இடங்களிலும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது.

ஒவ்வொரு பாஸ்வேர்டும் வெவ்வேறாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, எழுத்துருக்கள், எண்கள், சிம்பல் ஆகியவற்றின் கலவையாக இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்வது அத்தனை சுலபமானது அல்ல. அது மட்டுமின்றி, புதிதாக ஒரு இடத்தில் சைன்-அப் செய்யும் போது தானாக உருவாகும் பாஸ் வேர்டுகளை கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.

ALSO READ |  உறவுகளின் உன்னதம் உணர்த்தும் தவளை - வைரலாகும் வீடியோ

பெரும்பாலான ஆன்லைன் ஹேக்குகளுக்கு காரணமாக இருப்பது பலவீனமான அல்லது எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய பாஸ்வேர்டுகள் தான். ஒவ்வொரு நொடியும் கிட்டத்தட்ட 579 பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்படுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டு மறந்து விட்டது என்று ரீசெட் செய்வது சாத்தியம் அல்ல. பாஸ்வேர்டு இல்லாமல் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த முடியுமா என்று பலரும் நினைத்திருப்பீர்கள். முடியும் என்று சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் மைக்ரோசாப்ட் புராடக்ட்டுகள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய வலைப்பதிவின் படி, பாஸ்வேர்டுக்கு மாற்று ஆப்ஷன்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், கமர்ஷியல் யூசர்கள் பாஸ்வேர்டு இல்லாமல் சைன்-இன் செய்ய முடியும் என்று அறிவித்தது. “உங்கள் மைக்ரோசாப்ட் கணக்கை நீங்கள் பாஸ்வேர்டு இல்லாமல், மைக்ரோசாப்ட் உறுதிப்படுத்தும் செயலி (Authenticator app) பயன்படுத்தி லாகின் செய்ய முடியும். நீங்கள் இனி மைக்ரோசாப்ட் செயலிகள் மற்றும் சேவைகளான அவுட்லுக், ஒன்டிரைவ், மைக்ரோசாப்ட் ஃபேமிலி சேஃப்டி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் செயலி, விண்டோஸ் ஹலோ, ஒரு செக்யூரிட்டி கீ அல்லது ஒரு வெரிஃபிகேஷன் கோடு மூலம் லாகின் செய்ய முடியும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ |  சோறு தான் முக்கியம்.. கல்யாண மண்டபம் எரிந்துக் கொண்டிருக்க, பந்தியில் ஒரு கட்டு கட்டும் நபர்... வைரல் வீடியோ

மைக்ரோசாப்ட் ஆதென்ட்டிகேட்டர் செயலியை பயன்படுத்துவது எப்படி

உங்கள் மொபைலில் ஆதென்ட்டிகேட்டர் செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் மைக்ரோசாப்ட் கணக்குடன் லிங்க் செய்து கொள்ளுங்கள். மைக்ரோசாப்ட் கணக்கில் லாகின் செய்து, Advanced Security Options என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள். அதன் கீழே Passwordless Account என்பது காணப்படும். அதில் Turn on என்பதைத் தேர்வு செய்யவும்.

திரையில் காட்டப்படும் அறிவிப்புகளை பின்பற்றி, உங்கள் ஆதென்ட்டிகேட்டர் செயலியில் தோன்றும் அறிவிப்பை அப்ரூவ் செய்யுங்கள். இனி நீங்கள் பாஸ்வேர்டு இல்லாமல் மைக்ரோசாப்ட் கணக்கு மற்றும் சேவைகளைப் பயன்படுத்தலாம். ஒருவேளை உங்களுக்கு பாஸ்வேர்டு பயன்டுத்த வேண்டும் என்று விரும்பினால், வழக்கம் போல நீங்கள் லாகின் செய்யலாம். தற்போது மைக்ரோசாப்ட் தயாரிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்த செயலி விரைவில் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Online

அடுத்த செய்தி