80-ஸ் மற்றும் 90-ஸ் கிட்ஸ்களுக்கு நட்சத்திரம் எண்ணுவது ஒரு பொழுதுபோக்கு. வெயில் காலத்தில் மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே தூங்குவது ஒரு சுகம். ஆனால் இன்றைக்கு மொட்டைமாடிக்கு போகும் வேலையும் இல்லை. நட்சத்திரம் என்னும் பசங்களும் இல்லை.
அப்படி எண்ணும் ஆட்களுக்கு நட்சத்திரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரியும். நட்சத்திரங்களின் எண்ணிக்கை குறைவு என்றதும் விண்வெளியில் நட்சத்திரங்கள் அழிந்து விட்டதோ இல்லை மறைந்து விட்டதோ என்று என்ன வேண்டாம். பூமியில் இருந்து பார்க்கும்போது மனிதர்களின் கண்களுக்கு தெரியும் நட்சத்திர ஒளி குறைந்துவிட்டது.
நகர்புறமாதலின் முதல் படி இரவை பகலாக்கும் விளக்குகள் தான். அளவுக்கு அதிகமாக இருக்கும் வெளிச்சத்தை ஒளி மாசு என்று கூறுவோம். அப்படி இரவில் அதிகரிக்கும் ஒளி மாசால் நம்மை சுற்றி அதீத ஒளி பரவியுள்ளது. இதனால் வானத்தில் இருக்கும் விண்மீன் வெளிச்சங்கள் மங்கிவிடுகிறது.
பகலில் சூரியனின் வெளிச்சத்தில் விண்மீன் ஒளி எப்படி மங்கிவிடுமோ அது போலவே இரவில் இருக்கும் செயற்கை விளக்கின் காரணமாக நட்சத்திரங்கள் மங்கத் தொடங்கிவிட்டன. 50,000 க்கும் மேற்பட்ட வானத்தை ரசிக்கும் நபர்களை வைத்து ஆய்வு செய்தபோது, மின் விளக்குகளின் இடைவிடாத இரவுநேர பிரகாசத்தால் ஏற்படும் பாதிப்பு தீவிரமடைந்து வருவது தெரியவந்துள்ளது.
2011 முதல் 2022 வரை செயற்கை விளக்குகளால் 7 முதல் 10% இரவு நேர வானத்தின் பிரகாசம் அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். இது செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி முன்னர் அளவிடப்பட்டதை விட அதிகமாகும். இந்த வெளிச்சத்தால் கண்காணிப்பு தளங்களில் காணக்கூடிய நட்சத்திரங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு குழந்தை பிறக்கும்போது 250 நட்சத்திரங்கள் தெரிகிறது என்றால் அந்த குழந்தைக்கு 18 வயதாகும் போது, 100 நட்சத்திரங்கள் மட்டுமே தெரியும். அந்த வேகத்தில் ஒளி மாசு ஏற்பட்டு வருகிறது. நட்சத்திரங்களை பார்க்கவேண்டும் என்றால் நகரத்தில் இருந்து வெளியேறி தொலைதூரம் செல்லவேண்டி இருக்கிறது. ஒளி மாசை கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Galaxy, Research, Tamil News