• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Spotify-ன் புதிய அம்சம்... இப்போது மற்ற யூசர்களை எளிதாக ப்ளாக் செய்யலாம்..

Spotify-ன் புதிய அம்சம்... இப்போது மற்ற யூசர்களை எளிதாக ப்ளாக் செய்யலாம்..

Spotify

Spotify

இப்போது நேரடியாக உங்கள் ஸ்பாட்டிஃபை கணக்கிலிருந்தே யூசர்களை நேரடியாக ப்ளாக் செய்ய முடியும். அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

  • Share this:
ஸ்பாட்டிஃபை என்பது ஒரு டிஜிட்டல் இசை ஸ்ட்ரீமிங் செய்யும் சேவை ஆகும். பாடல்களை, இசை தொகுப்புகளை பதிவிறக்கம் செய்யாமலே இணையத்தில் நேரடியாக கேட்டு ரசிக்கலாம். ஆஃப்லைன் மியூசிக் பிளேயரில் இருப்பதைப் போலவே, பல்வேறு அம்சங்கள் ஸ்பாட்டிஃபையிலும் இருக்கின்றன. ஆனால், ஒரு ஆன்லைன் சேவை என்பதால், மற்ற செயலிகள் போலவே உங்கள் கணக்கு, பிளேலிஸ்ட் உள்ளிட்டவற்றை மற்ற யூசர்கள் பார்க்க முடியும். இதில் பிற யூசர்களை நேரடியாக ப்ளாக் செய்ய முடியாது. நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்துடன் கோரிக்கை அல்லது புகார் கொடுப்பதன் வழியாகத் தான் ப்ளாக் செய்ய முடியும். ஆனால், இப்போது நேரடியாக உங்கள் ஸ்பாட்டிஃபை கணக்கிலிருந்தே யூசர்களை நேரடியாக ப்ளாக் செய்ய முடியும். அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

இதைப் பற்றி The Verge க்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில் “ஸ்பாட்டிஃபையில் மிகச்சிறந்த யூசர் அனுபவங்களை வழங்குவதற்கு நாங்கள் உறுதியளித்து, அதை நிறைவேற்றி வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் பிரைவசி எங்களுக்கு எப்போதுமே மிக மிக முக்கியமானது. எனவே, அவர்கள் வசதியாக உணர, ப்ளாக் செய்யும் அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த அம்சம், யூசர்களுக்கு தங்கள் கணக்கை பாதுகாப்பாக பயன்படுத்த உதவுகிறது, அதிக கண்ட்ரோல் அளிக்கிறது. நாங்கள் உறுதியளித்ததை நிறைவேற்ற முடிந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி” என்று கூறப்பட்டிருந்தது.

Also read:  திருடனுடன் மல்லுக்கட்டு.. நடிகை மீது சரமாரி தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி..

ஸ்பாட்டிஃபையில் யூசர்களை ப்ளாக் செய்வது எப்படி?

* ஸ்பாட்டிஃபையில் யூசர்களை ப்ளாக் செய்ய, நீங்கள் ப்ளாக் செய்ய விரும்பும் ஸ்பாட்டிஃபை யூசர் புரோஃபைலுக்கு செல்லுங்கள்.

* அந்த யூசரின் பப்ளிக் பிளேலிஸ்ட்டின் மேலே இருக்கும் மூன்று-புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.

* நீங்கள் மொபைல் சாதனத்தில் ப்ளாக் செய்ய முயற்சி செய்தால், “block” or “block user” (ப்ளாக் அல்லது ப்ளாக் யூசர்) என்பதைத் தேர்வு செய்யவும்.

* நீங்கள் ஒரு யூசரை ப்ளாக் செய்தவுடன், அவரால் உங்கள் ஸ்பாட்டிஃபை பக்கத்தையோ, உங்களின் பப்ளிக் பிளேலிஸ்ட்டையோ அல்லது நீங்கள் எந்த பாடல்களை, இசையை கேட்கிறீர்கள் என்று உங்களின் ஆக்டிவிட்டிகளை அக்சஸ் செய்ய முடியாது. அதே போல, இதற்கு முன்னர் நீங்கள் ப்ளாக் செய்த யூசர்களையும் நீங்கள் தற்போது அன்-ப்ளாக் செய்யலாம்.

Also read:  Kihnu தீவுகள்: 90% பெண்கள் மட்டுமே வாழும் அதிசய தீவு - ஆண்கள் எங்கே?

* இதற்கு முன்னர், ஸ்பாட்டிஃபை கணக்கில் யூசர்களை ப்ளாக் செய்ய நீங்கள் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுக வேண்டும். அதே போல, 2019 ஆம் ஆண்டில், ஆர்ட்டிஸ்ட்டுகளை ப்ளாக் செய்யும் தேர்வை ஸ்பாட்டிஃபை வழங்கியிருந்தது. இரண்டு ஆண்டுகளாக ‘ப்ளாக் யூசர்’ என்ற அம்சம் வேண்டும் கேட்டு வந்த ஸ்பாட்டிஃபை யூசர்களின் விருப்பம் நிறைவேறியுள்ளது.

* இசை மற்றும் பாட்காஸ்ட்களை பாதுகாப்பாக கேட்டு ரசிக்கவும், சிறந்த யூசர் அனுபவத்தையும் ஸ்பாட்டிஃபை வழங்குகிறது. இந்த வாரத்தில் இந்த ப்ளாக் அம்சம் அனைத்து யூசர்களுக்கும் அப்டேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: