முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்தியாவில் அறிமுகமானது ஸ்பாட்டிஃபை லைட்..!

இந்தியாவில் அறிமுகமானது ஸ்பாட்டிஃபை லைட்..!

ஸ்பாட்டிஃபை லைட்

ஸ்பாட்டிஃபை லைட்

ஆண்ட்ராய்டு ஸ்மாட்ஃபோன்களில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :

உலகின் முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாட்டிஃபை தற்போது லைட் வெர்ஷனாக இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

சர்வதேச அளவில் பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தும் மக்களுக்காகவே ஸ்பாட்டிஃபை லைட் வெர்ஷனாக அறிமுகமாகி உள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மாட்ஃபோன்களில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

வெறும் 10MB ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மட்டும் தேவைப்படும் அளவுக்கு லைட் ஆக வெளியாகி உள்ளது ஸ்பாட்டிஃபை. ஆனாலும், லைட் வெர்ஷன் தரத்தில் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை என்றும் அந்நிறுவனம் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஸ்பாட்டிஃபை ஆப்-ல் இருப்பது போலவே மியூசிக் லைப்ரரி, தேடுதல் ஆப்ஷன், பரிந்துரைகள் ஆகியவை லைட் வெர்ஷனிலும் இடம் பெற்றிருக்கும்.

இரண்டு மாத சோதனைகளுக்குப் பின்னர் தற்போது இந்தியாவின் அத்தனை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் ஏற்றவாறு லைட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா உடன் பிரேசில், கனடா, மெக்சிகோ, சவுதி அரேபியா, எகிப்து, லெபனான், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரகம், குவைத், கத்தார், தென்னாப்பிரிக்கா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஸ்பாட்டிஃபை லைட் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: உலகின் மிகச்சிறிய கேமிராவை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சோனி!

First published:

Tags: Android Apps