விரைவில் வருகிறது 5ஜி நெட்வொர்க் சேவை!

5ஜி சேவை சோதனை மற்றும் ஏலத்திற்கான ஏற்பாடுகள் ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும்.

Web Desk | news18
Updated: March 6, 2019, 10:52 PM IST
விரைவில் வருகிறது 5ஜி நெட்வொர்க் சேவை!
5ஜி
Web Desk | news18
Updated: March 6, 2019, 10:52 PM IST
தொலைத்தொடர்புத் துறை 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஆன்லைன் ஏல பணிகளில் முழு வீச்சாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் முதல் முறையாக 5ஜி அலைக்கற்றை விற்க உள்ளதால் அதன் வேகம் துல்லியம் குறித்துச் சோதனைகளும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனை முடிவு பெற்ற உடன் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அது குறித்த முன்னோட்டம் செய்து காண்பிக்கப்படும்.

5ஜி சேவை சோதனை மற்றும் ஏலத்திற்கான ஏற்பாடுகள் ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும். செப்டம்பர் மாதம் முதல் அலைகற்றை விற்பனைக்கு வரும் என்றும் கூறுகின்றனர்.


மறுபக்கம் இந்தியாவின் முக்கியமான 3 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மட்டும் 8 லட்சம் கோடி ரூபாய்க் கடன் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இந்த ஏலத்தில் எப்படி இவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கேள்வி எழுந்து வருகிறது.

5ஜி தொலைத்தொடர்பு சாதனங்களை ஏற்கனவே ஹூவாய் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால் அதன் சோதனை ஓட்டத்தின் போதே பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே ஹூவாய் நிறுவனத்திடமும் அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் என்ன என்பது குறித்து இந்தியத் தொலைத்தொடர்புத் துறை விவாதித்து வருகிறது.

மேலும் பார்க்க:

Loading...

First published: March 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...