• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Live-இல் புருவங்கள், மீசை, தாடியை மாற்றலாம்.. Zoom ஆப் கொண்டுவந்த புதிய அம்சம் என்ன? எப்படி அமைப்பது?

Live-இல் புருவங்கள், மீசை, தாடியை மாற்றலாம்.. Zoom ஆப் கொண்டுவந்த புதிய அம்சம் என்ன? எப்படி அமைப்பது?

Zoom App

Zoom App

பல மாதங்களாக அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே பணி செய்து கொண்டிருக்கும் பணியாளர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக தான் ஆபீஸ் சந்திப்புகளில் தோன்றுகின்றனர். 

  • Share this:
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு ஆண்டு கடந்துவிட்டது. இன்னும் அதன் தாக்கம் முழுமையாக குறையவில்லை. வைரஸ் பரவலைத் தடுக்க பல நாடுகளும் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தன. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது. பல நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியது. வீட்டில் இருந்து பணிகளை தொடர்பவர்களுக்கான சந்திப்புகள் ஆன்லைன் வழியாக நடந்து வருகின்றன.

பல மாதங்களாக அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே பணி செய்து கொண்டிருக்கும் பணியாளர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக தான் ஆபீஸ் மீட்டிங்குகளில் தோன்றுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு வீடியோ கான்பரன்சிங் செயலியான Zoom நிறுவனம் தனது யூசர்களுக்கு அடிக்கடி பல அம்சங்களை வழங்கிவருகிறது. அதில் பல அம்சங்கள் பயனுள்ளதாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. அந்த வகையில் Zoom தற்போது `ஸ்டுடியோ எஃபெக்ட்ஸ்’ என்ற அம்சத்துடன் வந்துள்ளது.

ஸ்டுடியோ எஃபெக்ட்ஸ் வழியாக யூசர்கள் தங்களுக்கு பிடித்த மாதிரியான புருவங்கள், மீசை, தாடி மற்றும் உதட்டின் நிறத்தை கூட லைவ் வீடியோ ஸ்ட்ரீம்களின் போது மாற்ற அனுமதிக்கிறது. The Verge வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த அம்சம், இன்னும் பீட்டா நிலையில் தான் உள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் ஓஎஸ்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதனை அறிவித்துள்ளனர். இதற்கு யூசர்கள் Zoom அமர்வைத் தொடங்கி வீடியோ அமைப்புகளுக்குச் செல்ல வேண்டும்.

பின்னர் அங்கிருந்து, "பேக்ரவுண்ட் & பில்டர்ஸ்" ("Background & Filters") என்பதைத் செலக்ட் செய்து, கீழ் வலது மூலையில் "ஸ்டுடியோ எஃபெக்ட்ஸ் ஐ(பீட்டா)" ("Studio Effects (Beta)") தேட வேண்டும். அதன் பிறகு, யூசர்கள் விரும்பும் எந்த தோற்றத்தையும் அவர்களால் ஈசியாக பெறமுடியும் என்று நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு, டெஸ்க்டாப் செயலியில் இது நடைமுறைக்கு வந்துள்ளது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட Zoom யூசர்களால் மட்டுமே இதை அணுக முடியும். முன்னதாக, ஆன்லைன் மூலம் குடும்பங்கள் ஒன்றிணைவது, நண்பர்களிடையேயான சாட்கள் மற்றும் ஆபிஸ் மீட்டிங்ஸ்களுக்கென சில சிறப்பு அம்சங்களை நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

கடந்த வாரம், நிறுவனம் new Zoom Rooms innovationகள் இனி அனைவருக்கும் கிடைக்கும் என்று அறிவித்தது. இது நிறுவனங்கள் பாதுகாப்பாக மீண்டும் ஆன்லைன் மூலம் ஆபிஸிற்குள் நுழையவும், 'எல்லா இடங்களிலும் பணியாற்றும் பணியாளர்களை' ('everywhere workforce') தக்கவைக்கவும் உதவும் என்று கூறியது. இந்த Zoom ஆப்ஸை பற்றி பல்வேறு நல்ல விஷயங்கள் இருந்தாலும் இந்த ஆப்ஸ் பாதுகாப்பானது இல்லை என்கிற செய்தியும் ஒரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாடுகளின் மாகாண அரசுகளும் இந்த ஆப்ஸை பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: