ட்விட்டர் நிறுவனத்தால் பல சர்ச்சைகளை எலான் மஸ்க் சேர்த்துக்கொண்டாலும் அவரது spacex நிறுவனம் தனது சோதனைகளை சரியாக செய்து வருகிறது. 2022 இல் வாரம் ஒரு செயற்கைகோள் சோதனையா என்று கேட்கும் அளவிற்கு அடிக்கடி விண்ணிற்கு அவர்களது விண்கலம் சென்றது. 2022 ஆம் ஆண்டில் 61 வெற்றிகரமான ஏவுதல்களில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செயற்கைகோள்கள், சரக்குகள் அனுப்புதல், விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புதல், மற்றும் அவர்களின் ஆறு மாத காலப் பணியை முடித்து வெற்றிகரமாக திருப்பி அழைத்துவருவது என்று அனைத்து விதமான பணிகளையும் செய்தது.
வெற்றி , தோல்வி என்று எல்லாம் கலந்து இருந்தாலும் அதன் பாடங்களை நன்றாக கற்றுக்கொண்டனர். ஜனவரி 3 அன்று spacex நிறுவனம் தனது 200 ஆவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள ஸ்பேஸ் லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 40 இலிருந்து ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட் மூலம் சுமார் 114 சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்மால்சாட் எனப்படும் சிறிய ரக செயல்களை ஏவுவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஆறாவது ராக்கெட் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செயற்கைக்கோள்களை லோ எர்த் ஆர்பிட் எனப்படும் போமிகு அருகே உள்ள கீழ் அடுக்கில் செலுத்தியது. இதற்கு முன்னாள் ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்களை spacex நிறுவனம் விண்ணில் செலுத்தியது.
114 செயற்கைக்கோள்களில், சுமார் 36 செயற்கைகோள்கள் பூமியை கண்காணிக்கும் . அவை ஒரு ரொட்டி அளவு மட்டுமே உள்ள செயற்கைகோள்கள் ஆகும். இந்த செயற்கைக்கோள்கள் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட பிளானட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
Liftoff! pic.twitter.com/xH6ulPu0YM
— SpaceX (@SpaceX) January 3, 2023
மேலும் அனைத்து செயற்கலைக்கோள்களும் சரியாக ஏவப்பட்டதா, அவை சரியாக இயங்கத்தொடங்கியதா என்ற செய்தி இனிமேல் தான் கிடைக்கும். அனால் இந்த ஆண்டின் முதல் ராக்கெட் ஏவப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு 3 மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் திட்டமும் நிறுவனத்திடம் உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elon Musk