Home /News /technology /

”மக்களே உஷார் நெட் பேங்கிங் மூலம் புது வைரஸ் உங்கள் பணத்தை திருடிவிடும்”: தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

”மக்களே உஷார் நெட் பேங்கிங் மூலம் புது வைரஸ் உங்கள் பணத்தை திருடிவிடும்”: தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

sova virus attack

sova virus attack

இந்தியாவில் ’சோவா’வைரஸ் உலவி, இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்துள்ளது என்றும் இந்த வைரஸ், ஆன்ட்ராய்டு போனுக்குள் ஊடுருவி, அதை முடக்கி விடக்கூடியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சோவா எனும் புதிய வைரஸ் மூலமாக இந்திய வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் திருடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

அமெரிக்கா, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளை சோவா வைரஸ் குறிவைத்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை தனது இலக்கு பட்டியலில் சேர்த்துள்ளதாக இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (CERT-In)  எச்சரித்துள்ளது.

சோவா வைரஸ் எப்படி செயல்படுகிறது:

போலி ஆன்ட்ராய்டு செயலிகளை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்தவுடன், அந்த போனில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள செயலிகளின் விவரங்களை வைரசின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வருக்கு தெரிவிக்கும். அதன்மூலம், குறிவைக்கப்படும் செயலிகள் தேர்வு செய்து அந்த செயலிகளின் முகவரிகளை 'சோவா' வைரசுக்கு சர்வரில் பதிவு ஆகும்.

பின்னர் அவை 'எக்ஸ்.எம்.எல்.' பைலில் சேமிக்கப்படும். குறிவைக்கப்பட்ட செயலிகள் பற்றி வைரசுக்கும், சர்வருக்கும் இடையே கருத்து பரிமாற்றம் நடைபெறும். வங்கி வாடிக்கையாளர்கள் 'சோவா' வைரஸ், மொபைல் பேங்கிங் செயலிகள், பணம் செலுத்தும் செயலிகள், கிரிப்டோகரன்சி செயலிகள் என 200-க்கு மேற்பட்ட செயலிகளை குறிவைத்து செயல்படுகிறது என அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

Also Read: Pornhub-ன் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட்டை திடீரென முடக்கிய இன்ஸ்டாகிராம்.!

அந்த செயலிகளுக்கு மேலே ஒரு அடுக்கை உருவாக்கி, ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களை ஏமாற்றக்கூடியது. மொபைல் பேங்கிங் செயலியை வாடிக்கையாளர் பயன்படுத்தும்போது, யூசர்நேம், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திருடி விடும். இது, வங்கிக்கணக்கில் உள்ள பணம் திருடு போவதற்கு வழி வகுக்கும் என இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு எச்சரித்துள்ளது.

சோவா வைரஸ் தாக்குதலில்  இருந்து எப்படி தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

இந்த நிலையில் இந்தியாவில் ’சோவா’வைரஸ் உலவி, இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்துள்ளது என்றும் இந்த வைரஸ், ஆன்ட்ராய்டு போனுக்குள் ஊடுருவி, அதை முடக்கி விடக்கூடியது. செட்டிங்ஸ்' பகுதிக்கு சென்று வைரசை நீக்குவதும் கடினம். நீக்கினாலும், இந்த செயலி பாதுகாப்பானது என்ற செய்தியுடன் திரும்ப வந்து விடும். பதிவிறக்கம் எனவே, வாடிக்கையாளர்கள் ஆபத்தான செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

பதிவிறக்கம் செய்யும் செயலிகளின் விவரங்களை படித்து பார்க்க வேண்டும். என்றும் அவ்வப்போது 'அப்டேட் செய்ய வேண்டும். செயலிகள் கேட்கும் தேவையற்ற அனுமதிகளை அளிக்கக்கூடாது என்றும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் சந்தேகத்துக்குரிய லிங்க்குகளை திறக்கக்கூடாது என இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு எச்சரித்துள்ளது.
Published by:Arunkumar A
First published:

Tags: India, Mobile banking, Virus

அடுத்த செய்தி