• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • எங்கள் சேவையை எந்த அளவுக்கு நம்பியுள்ளீர்கள் என தெரியும் - மன்னிப்பு கேட்ட மார்க்..

எங்கள் சேவையை எந்த அளவுக்கு நம்பியுள்ளீர்கள் என தெரியும் - மன்னிப்பு கேட்ட மார்க்..

 எங்கள் சேவையை எந்த அளவுக்கு நம்பியுள்ளீர்கள் என தெரியும் - மன்னிப்பு கேட்ட மார்க்..

எங்கள் சேவையை எந்த அளவுக்கு நம்பியுள்ளீர்கள் என தெரியும் - மன்னிப்பு கேட்ட மார்க்..

பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை உலகம் முழுவதும் சுமார் 6 மணி நேரம் முடங்கியதற்கு, பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

  • Share this:
    வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணி முதல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கியது. இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனால் அவற்றை சார்ந்துள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு இந்த கோளாறு சரி செய்யப்பட்டது.

    இந்நிலையில், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் முடங்கியதற்கு, பேஸ்புக் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக மார்க் சக்கர்பெர்க் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மெசன்ஜர் செயலிகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. நெருங்கியவர்களிடம் தொடர்புகொள்ள எங்கள் சேவையை எந்த அளவுக்கு நம்பியுள்ளீர்கள் என தெரியும். இடையூறுக்கு மன்னிக்கவும்' என்று குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோல், பேஸ்புக் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷ்ரோப்ஃபர் தடங்கலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார், "எங்களை நம்பியிருக்கும் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய வணிகங்களும், குடும்பங்களும், தனிநபர்களும் என்னை மன்னிக்கவும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, 100 சதவீத நிலையை அடைய சிறிது நேரம் ஆகலாம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. எனினும், இது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்டது மிகப் பெரிய சேவை பாதிப்பு என டவுண்டிடெக்டர் (Downdetector) நிறுவனம் கூறியுள்ளது.

    பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதன் காரணமாக பேஸ்புக் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது. சில மணி நேரங்களிலேயே 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை மார்க் சந்தித்தார். இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: