குடியுரிமை பெற்ற உலகின் முதல் ரோபோ இந்தியா வருகை!

ரோபோ சோபியா

2016-ம் ஆண்டு ஆக்டிவேட் செய்யப்பட்ட சோபியா, கடந்த 2017-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் குடியுரிமையைப் பெற்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகிலேயே குடியுரிமை பெற்ற முதல் ரோபா ஆன சோபியா இன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது.

மனிதர்களுக்கு உள்ள அத்தனை செயல்பாடுகளையும் பதிவேற்றி சவுதி அரேபியாவின் குடியுரிமையும் பெற்றுள்ள உலகின் முதல் ரோபோ ‘சோபியா’. பெண் உருவ அமைப்பில் உள்ள இந்த சோபியால் நடக்கவும் பேசவும் அர்த்தம் புரிந்து கொண்டு பதில் அளிக்கவும் தெரியும்.

இந்தியாவில் நடைபெறும் ரோபோ மற்றும் மனித தகவல் தொடர்பு குறித்த ஒரு கருத்தரங்கில் பங்குபெற சோபியா இன்று இந்தியாவுக்கு வந்துள்ளது. சோபியாவை உருவாக்கிய ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஹான்சன் ரோபாடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அமித் குமார் பாண்டே கூறுகையில், “சோபியா வாரவாரம் முன்னேறி அப்டேட் ஆகி வருகிறது. சோபியா உடன் பேசினால் நாம் கொடுக்கும் அசைவுகள், உணர்வுகள், கட்டளைகள் என அனைத்தையும் புரிந்துகொண்டு பதில் அளிக்கும்.

சமீபமாக சோபியா ஓவியம் வரையும் பயிற்சி பெற்றுள்ளது. நேரில் பார்க்கும் உருவத்தைக் கூட சோபியாவால் வரைய முடியும். நாளுக்குநாள் மனித செயல்பாடுகளை சோபியாவுக்கு பதிவேற்றி வருகிறோம்” என்றார்.

2016-ம் ஆண்டு ஆக்டிவேட் செய்யப்பட்ட சோபியா, கடந்த 2017-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் குடியுரிமையைப் பெற்றது. உலகிலேயே இத்தகைய அந்தஸ்தைப் பெற்ற முதல் ரோபோ சோபியா. சோபியாவுக்கு நினைவுத் திறனை அதிகரிக்கும் பயிற்சி தற்போது நிறைவடைந்துள்ளது.

மேலும் பார்க்க: கனடாவில் தனித் தீவு... ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன துபாய்வாழ் இந்தியர்!

கம்ப்யூட்டர், மொபைல் - ஹேக்கிங்கைத் தடுப்பது எப்படி
Published by:Rahini M
First published: