ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

விரைவில் நீங்கள் இதையும் ஸ்டேட்டஸாக வைக்கலாம் - வாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புதிய அப்டேட்!

விரைவில் நீங்கள் இதையும் ஸ்டேட்டஸாக வைக்கலாம் - வாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புதிய அப்டேட்!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

வீடியோக்களை போலவே 30 வினாடிகள் அடங்கிய வாய்ஸ் நோட்ஸ்களை Status-ஆக அப்லோட் செய்ய யூஸர்கள்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக உள்ள இன்ஸ்டன்ட் மெசேஜிங் சர்விஸ் ஆப்ஸ்களில் முதன்மையானது மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் எளிதாக தொடர்பு கொள்ள மற்றும் அரட்டை அடிக்க யூஸர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப உதவுவதோடு மட்டுமல்லாமல் ஆடியோ, வீடியோ, டாக்குமென்ட்ஸ் உள்ளிட்ட பலவற்றை ஷேர் செய்யவும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நாடுகள் மற்றும் இந்தியாவில் கோடிக்கணக்கான யூஸர்களை கொண்ட வாட்ஸ்அப், அவர்களின் அனுபவத்தை மேம்படுத்த பல அப்டேட்ஸ்களை அறிமுகப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வாட்ஸ்அப் யூசர்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பது ஸ்டேட்டஸ் (Status) அம்சம் தான்.

  தாங்கள் சந்தோஷமாக, உற்சாகமாக இருந்தாலும் அது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை Status-ல் வைக்கிறார்கள். சோகமாக இருந்தாலும் அதற்கேற்ப Status-ல் மீம்ஸ், சோக பாடல்கள் அல்லது கவிதை வரிகளை வைக்கிறார்கள். ஒருவர் தற்போது என்ன மைன்ட்செட்டில் இருக்கிறார் என்பதை வாட்ஸ்அப்-பின் Status மூலமே நீங்கள் தெரிந்து கொண்டு விடலாம். 24 மணி நேரம் மட்டுமே கான்ட்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்களுக்கு தெரியும்படியான இந்த Status அம்சத்தை வாட்ஸ்அப் 2017-ல் அறிமுகப்படுத்தியது.

  தற்போது இந்த Status அம்சம் டெக்ஸ்ட், ஃபோட்டோஸ் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்ய யூஸர்களை அனுமதித்து வருகிறது. இதனிடையே வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தில் மற்றொரு அப்டேட்டை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  WaBetaInfo-ன் தகவல் படி, யூஸர்கள் வாய்ஸ் நோட்ஸ்களை தங்கள் Status-ஆக வைக்க வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டு உள்ளது. வாட்ஸ்அப் யூஸர்கள் வாய்ஸ் நோட்ஸ்களை ஸ்டேட்டஸ் அப்டேட்களாக அப்லோட் செய்ய உதவும் புதிய அம்சம் தொடர்பான பரிசோதனை நடந்து கொண்டிருப்பதாகவும், சில வாரங்களில் பீட்டா யூஸர்களுக்கு இது ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  வீடியோக்களை போலவே 30 வினாடிகள் அடங்கிய வாய்ஸ் நோட்ஸ்களை Status-ஆக அப்லோட் செய்ய யூஸர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வாட்ஸ்அப் ட்ராக்கரான WaBetaInfo கூறியுள்ளது. மேலும் இந்த அம்சம் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் கம்போஸரை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூஸர்கள் தங்கள் வாய்ஸ் நோட்ஸ் ஸ்டேட்டஸிற்கான பேக்ரவுண்ட் கலரை தேர்வு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. யூஸர்கள் தங்கள் குரலில் பேசி அந்த வாய்ஸ் நோட்ஸை Status வைக்க புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை.

  Read More: உங்களுக்கே தெரியாமல் ஹேக்கர்கள் மீட்டிங்கில் சேரலாம் - Zoom யூஸர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

  இந்த அம்சம் லைவிற்கு வந்ததும் Status செக்ஷனுக்கு சென்று டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வைக்க உதவும் பேனா ஐகானை டேப் செய்தால் வாய்ஸ்நோட்ஸை ரெக்கார்ட் செய்வதற்கான மைக் ஐகானை காண்பார்கள். உங்கள் வழக்கமான ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ்களை வாய்ஸ் நோட்ஸ் ஸ்டேட்டஸ்களும் அதே பிரைவசி செட்டிங்ஸை பின்பற்றும். அதாவது உங்கள் வழக்கமான ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ்களை பார்க்க முடியாதவர்ககளுக்கு உங்கள் வாய்ஸ் நோட்ஸ் ஸ்டேட்டஸ்களும் தெரியாது.

  இந்த அம்சம் தவிர நீண்ட நேரம் மேற்கொள்ளப்படும் வீடியோ கால்ஸ்களின் போது avatar அம்சத்தை பயன்படுத்த யூஸர்களை அனுமதிக்கும் அப்டேட்டிலும் வாட்ஸ்அப் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Video, WhatsApp, WhatsApp Audio, Whatsapp Update