ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சீனாவில் அறிமுகமான iQOO 11 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் - விரைவில் இந்தியாவிலும் அறிமுகம்.!

சீனாவில் அறிமுகமான iQOO 11 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் - விரைவில் இந்தியாவிலும் அறிமுகம்.!

iQOO 11 சீரிஸ்

iQOO 11 சீரிஸ்

iQOO 11 Series | iQoo 11 சீரிஸானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OriginOS 3.0 ஆப்ரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Vivo-வுக்கு சொந்தமான சீன ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி நிறுவனமான iQoo மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது 11 சீரிஸை சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. iQOO 11 சீரிஸானது iQOO 11 மற்றும் iQOO 11 Pro 5G மொபைல்களை கொண்டுள்ளது.

குவால்காம் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இந்த போன்கள் இயங்குகின்றன. சீனாவில் iQOO 11 சீரிஸ் மொபைல்களை அறிமுகப்படுத்திய பிறகு, iQOO நிறுவனம் அதன் இந்த சமீபத்திய பிரீமியம் மொபைல் இந்தியாவிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. iQOO community forum-ல் ஷேர் செய்யப்பட்டுள்ள ஒரு போஸ்ட்டின் படி, இந்தியாவில் iQOO 11 சீரிஸ் ( iQOO 11 மற்றும் iQOO 11 Pro) அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்றும், விற்பனை ஜனவரி 13 முதல் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை விவரங்களின்படி iQOO 11 மொபைலின் அடிப்படை வேரியன்ட்டின் (8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ்) விலை CNY 3,799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 44,900) ஆக உள்ளது. அதே நேரம் iQOO 11 Pro மொபைலின் அடிப்படை வேரியன்ட்டின் (8GB ரேம்+ 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ்) ஆரம்ப விலை CNY 4,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.59,000)ஆக உள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தும் போது iQOO 11 சீரிஸ் இதே போன்ற விலை வரம்பில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:

iQoo 11 சீரிஸானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OriginOS 3.0 ஆப்ரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது.. iQoo 11 மற்றும் 11 Pro ஸ்மார்ட் போன்கள் 1440x3200 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்ஸ் கொண்ட 6.78-இன்ச் Samsung E6 AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது LPTO 4.0 டெக்னலாஜியை பயன்படுத்துகிறது. இந்த டிவைஸ்களின் ஸ்கிரீன்கள் 144Hz, 1 பில்லியன் கலர்ஸ் மற்றும் HDR10+ சப்போர்ட் ரெஃப்ரஷ் ரேட்டை வழங்குகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் Adreno 740 GPU உடன் இணைந்து octa-core Snapdragon 8 Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன.

iQOO 11 மொபைலானது OIS உடன் 50MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 13MP 2x டெலிஃபோட்டோ கேமராக்கள் கொண்ட டிரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதே சமயம் iQoo 11 Pro மாடலில் OIS உடன் 50MP Sony VCS IMX866 சென்சார், மேக்ரோ ஆப்ஷனுடன் கூடிய 50MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 13MP 2x போர்ட்ரெய்ட் கேமரா ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் f/2.45 துளை கொண்ட 16MP செல்ஃபி ஷூட்டரை கொண்டுள்ளன.

Also Read : சந்தா கட்டாமல் OTT-யில் திரைப்படங்களை பார்க்கலாம்..! - எப்படி தெரியுமா?

இரண்டு மாடல்களுக்கும் இடையிலான முக்கிய வித்தியாசம் என்று வரும் போது iQoo 11 Pro ஒரு கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மறுபுறம் iQoo 11 ஒரு ஃபிளாட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. iQoo 11 மொபைலானது 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி யூனிட்டை கொண்டுள்ளது. மறுபுறம் iQoo 11 Pro மொபைலானது 200W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 4700mAh பேட்டரியை கொண்டுள்ளது.

First published:

Tags: Smartphone, Tamil News, Technology, VIVO