புதிய சோனி எக்ஸ்பிரியா XZ3 போன்: சிறப்பம்சங்கள்

news18
Updated: September 1, 2018, 10:01 PM IST
புதிய சோனி எக்ஸ்பிரியா XZ3 போன்: சிறப்பம்சங்கள்
புதிய சோனி எக்ஸ்பிரியா XZ3 .
news18
Updated: September 1, 2018, 10:01 PM IST
சோனி மொபைல் நிறுவனம் புதிய எக்ஸ்பிரியா எக்ஸ்.இஸட் 3 போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் 63,700 ரூபாய் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எக்ஸ்பிரியா எக்ஸ்.இஸட் 3 போனை பெர்லினில் நடந்த தொழில்நுட்ப மாநாட்டில் சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த போன் கருப்பு, வெள்ளை, சில்வர், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் போர்டாக்ஸ் ரெட் என 5 வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் கடந்த வருடம் வெளியான எக்ஸ்.இஸட் 2-ன் மாடலைப் போலவே வடிமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள 7000-சீரிஸ் அலுமினியம் ஃபரேம் போனின் லைஃப்டைமை அதிகரிக்கும் வகையில் உறுவாக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்கீரின் 18:9 ஆக்ஸ்பட் ரேஷியோ, 2880 x 1440 பிக்ஸல் ரிசல்யுஷன் கொண்டது. மற்ற எக்ஸ்பிரியா போன்களை போலவே இதிலும், சோனி பிரேவியா டிவியின் இமேஜ் பிராஸசிங் டெக்னாலஜி  உள்ளது.குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி இயங்குதளத்தில் வேலை செய்யும் இந்த போன், 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. கேமராவைப் பொறுத்தவரைப் பின்பக்கம் 19 மெகா பிக்சலுடன் கூடிய எக்ஸ்மோர் ஆர்.எஸ் மோஷன் ஐ கேமரா மூலம் 4கே வீடியோக்களை எடுக்கமுடியும். முன்பக்க கேமரா 13 மெகா பிக்ஸல் மற்றும் 5 மெகா பிக்சல் கேமராக்கள் கொண்டது.

மேலும் 3டி பேஸ் ஸ்கேனிங் வசதியும் இதில் உள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கொண்ட இந்த போன் டுயல் சிம், 4ஜி எல்.டி.ஈ, புளுடூத் 5.0 வசதிகளையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: September 1, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...