உலகின் மிகச்சிறிய கேமிராவை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சோனி!

ஜூலை 15-ம் தேதி முதல் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் RX0 II கேமிராவின் விலை 57,990 ரூபாய் ஆகும்.

Web Desk | news18
Updated: July 9, 2019, 1:53 PM IST
உலகின் மிகச்சிறிய கேமிராவை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சோனி!
சோனி RX0 II
Web Desk | news18
Updated: July 9, 2019, 1:53 PM IST
உலகின் மிகவும் சிறிய ரக கேமிராவை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது சோனி நிறுவனம்.

கையடக்க அளவிலான கேமிராக்களை வெளியிட்டு வரும் சோனி நிறுவனம் தற்போது உலகின் மிகச்சிறிய RX0 II கேமிராவை வெளியிட்டுள்ளது. 59மிமி x 40.5 மிமி x 35மிமி அளவிலான இந்த கேமிராவின் மொத்த எடையே 132 கிராம் ஆகும். சிறிய கேமிரா என்றாலும் அசத்தல் தொழில்நுட்பத்தில் உலகத் தரத்தில் RX0 II இருக்கும் என்கிறது சோனி.

180 டிகிரி ஸ்கிரீன், வாட்டர்ப்ரூஃப், டஸ்ட்ப்ரூஃப், ஷாக்ப்ரூஃப் மற்றும் க்ரஷ்ப்ரூஃப் அம்சங்களைக் கொண்டுள்ளது. 15.3 மெகாபிக்சல் Exmor RS CMOS பொருத்தப்பட்டுள்ளதால் புகைப்படத்துக்கு சிறப்பான நிறம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.


சர்வதேச சந்தையில் கடந்த மார்ச் மாதம் அறிமுகமான சோனி RX0 II கேமிராவின் விலை சுமார் 48,000 ரூபாய் ஆக உள்ளது. 4K 30p முழு பிக்சல் வரையில் இந்த சோனி RX0 II கேமிரா வீடியோவில் தரம் கிடைக்கும்.

ஜூலை 15-ம் தேதி முதல் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் RX0 II கேமிராவின் விலை ₹57,990 ஆகும்.

மேலும் பார்க்க: சாம்சங் ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய போலி ஆப்... டவுன்லோடு செய்து ஏமாந்த 1 கோடி பேர்..!
First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...