Home /News /technology /

அமெரிக்காவில் டாய்லெட் பேப்பர் வாங்கும் ஆலோசனையை விட கூகுளில் ட்ரெண்டான சோனி பிளேஸ்டேஷன் 5!

அமெரிக்காவில் டாய்லெட் பேப்பர் வாங்கும் ஆலோசனையை விட கூகுளில் ட்ரெண்டான சோனி பிளேஸ்டேஷன் 5!

அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட பொருள் டாய்லெட் பேப்பர்தான் என நினைத்தால் அது தவறு. அமெரிக்காவில் அதிகம் தேடப்பட்ட பொருளில் புதிய சோனி பிளேஸ்டேஷன் 5 (Sony PlayStation 5) தான்  இடம்பெற்றுள்ளது

அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட பொருள் டாய்லெட் பேப்பர்தான் என நினைத்தால் அது தவறு. அமெரிக்காவில் அதிகம் தேடப்பட்ட பொருளில் புதிய சோனி பிளேஸ்டேஷன் 5 (Sony PlayStation 5) தான்  இடம்பெற்றுள்ளது

அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட பொருள் டாய்லெட் பேப்பர்தான் என நினைத்தால் அது தவறு. அமெரிக்காவில் அதிகம் தேடப்பட்ட பொருளில் புதிய சோனி பிளேஸ்டேஷன் 5 (Sony PlayStation 5) தான்  இடம்பெற்றுள்ளது

    கொரோனா வைரஸ் (COVID19) பரவல் காரணமாக பல்வேறு உலக நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த விஷயம். அந்த வகையில் அமெரிக்காவை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்த ஆண்டு பல நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. அவற்றில் ஒன்று தான் பேனிக் பையிங் (panic buying) என்று சொல்லக்கூடிய மளிகை பொருட்களின் பற்றாக்குறை. அதிலும் குறிப்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தொடக்க காலத்தில் பல்வேறு கடைகளில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

    அதுதான் டாய்லெட் பேப்பர் (toilet paper). ஊரடங்கு காரணமாக மளிகை கடைகளுக்கு செல்லும் மக்கள் முதலில் எடுக்கும் பொருள் இந்த டாய்லெட் பேப்பர் தான். பலர் இதனை பல்க் ஆர்டர் செய்து வாங்கி சென்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட பொருள் இதுதான் என நினைத்தால் அது தவறு. அமெரிக்காவில் அதிகம் தேடப்பட்ட பொருளில் புதிய சோனி பிளேஸ்டேஷன் 5 (Sony PlayStation 5) தான்  இடம்பெற்றுள்ளது. இதனை கூகுள் நிறுவனமே உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூகுள் சர்ச்சில் அதிகம் தேடப்பட்ட வினவல்கள் குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

    அதில் அமெரிக்காவில் 2020ம் ஆண்டிற்கான கூகுளின் சமீபத்திய தேடல் வினவல்களில் சோனி பிஎஸ் 5 முதலிடம் பிடித்துள்ளது. இந்த சாதனம் அமெரிக்காவில் நவம்பர் 12ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், சராசரியாக இதன் தேவை அதிகரித்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆண்டின் தேடல் 2020 (Year in Search 2020) பட்டியலில் கூகுளின் 'எங்கே வாங்குவது' என்ற பிரிவின் கீழ், அமெரிக்காவில் இடம்  பிடித்த முதல் ஐந்து கேள்விகள்,  பிஎஸ் 5 எங்கு வாங்குவது, டாய்லெட் பேப்பரை எங்கே வாங்குவது, முகக்கவசங்களை எங்கே வாங்குவது, எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ்-ஐ எங்கே வாங்குவது, மற்றும் ஹாண்ட் சானிடிசரை எங்கே வாங்குவது ஆகியவை அடங்கும். 

    குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு அமெரிக்காவின் சிறந்த தேடல் வினவல்கள் பட்டியலில் தேர்தல் முடிவுகள், கொரோனா வைரஸ், கோபி பிரையன்ட், கொரோனா வைரஸ் அப்டேட் மற்றும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதேபோல, கூகுள் தனது 'தேடல் 2020' பட்டியலில் இந்தியாவின் சிறந்த கேள்விகளுக்கான தரவுகளையும் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு நாட்டின் முதல் மூன்று வினவல்களில் "இந்தியன் பிரீமியர் லீக், கொரோனா வைரஸ், அமெரிக்க தேர்தல் முடிவுகள்" ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

    மேலும் திரைப்படங்கள் பிரிவில் இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவை தில் பெச்சாரா, சூரரை போற்று, தன்ஹாஜி, சகுந்தலா தேவி, மற்றும் குஞ்சன் சக்சேனா ஆகியவை அடங்கும். ஆளுமைகள் பிரிவை பொறுத்தவரை, புதிய அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்திய பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, மற்றும் பாடகி கனிகா கபூர் ஆகியோர் இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். கூகுள் இந்தியாவில் பிரபலமாக இருந்த மற்ற சர்வதேச நபர்களில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மற்றும் அமெரிக்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் அடங்குவர். 

    மேலும் படிக்க...கொரோனா காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுப்பு... வியாபாரிகள் வருமானம் இழந்து தவிப்பு..

    இதையடுத்து வெப் சீரிஸ் உட்பட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, ஸ்பானிஷ் குற்ற நாடகமான மனி ஹெய்ஸ்ட் (Netflix) முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சோனி எல்.ஐ.வி-ல் ஒளிபரப்பாகும் ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி, அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படும் மிர்சாபூர் 2 உள்ளிட்ட இந்திய நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, ஆண்டு தேடல் பட்டியலில் இந்தியாவின் பெரும்பாலான 'எப்படி' மற்றும் 'என்ன' பிரிவுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் பட்டியலையும் கூகுள் பகிர்ந்துள்ளது. 

    'எப்படி' என்ற பிரிவில், கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட வினவல்களில் பன்னீர் தயாரிப்பது எப்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி மற்றும் டல்கோனா காபி தயாரிப்பது எப்படி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதேபோல், 'என்ன' என்ற பிரிவில் கொரோனா வைரஸ் என்றால் என்ன, பினோட் என்றால் என்ன, பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன ஆகிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன. உலகளவில், கொரோனா வைரஸ், தேர்தல் முடிவுகள், கோபி பிரையன்ட், ஜூம் மற்றும் ஐபிஎல் ஆகியவை இந்த ஆண்டின் சிறந்த பிரபலமான கேள்விகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sony, Technology

    அடுத்த செய்தி