ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சோனி PlayStation 5 வந்தாச்சு - அமேசான், பிளிப்கார்ட்டில் முன்பதிவு செய்யலாம்!

சோனி PlayStation 5 வந்தாச்சு - அமேசான், பிளிப்கார்ட்டில் முன்பதிவு செய்யலாம்!

சோனி PlayStation 5

சோனி PlayStation 5

சில தொழில்நுட்ப காரணங்களால் குரோமா மற்றும் பிளிப்கார், ரிலையன்ஸ் டிஜிட்டல் தளங்கள் சில ஆர்டர்களை தாங்களாகவே ரத்து செய்தனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கேம் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோனி பிளே ஸ்டேஷன் 5 அறிமுகப்படுத்தப்பட்டு முன்பதிவுகளும் தொடங்கியுள்ளது.

சோனி பிளே ஸ்டேஷன் 5 இன்று முதல் வெப்சைட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஸ்க்குடன் கூடிய ஸ்டாண்டர்டு எடிசன் மற்றும் டிஜிட்டல் எடிசன் என இரண்டும் முன்பதிவுக்கு வந்துள்ளது. அமேசான், பிளிப்கார்ட், குரோம், சோனி சென்டர், ப்ரீப்பெய்ட் கேமர் கார்டு மற்றும் விஜய் சேல்ஸ் ஆகிய தளங்களில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிஜிட்டல் எடிசனில் சோனி பிளேஸ்டேஷன் 5 இந்தியாவிலேயே 5வது ரீஸ்டாக்காகும். ஆனால், இம்முறை எத்தனை கன்சோல்கள் இந்தியாவிற்கு கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை சோனி கொடுக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேநேரத்தில் சோனி பிளேஸ்டேஷன் 5க்கு ஏராளமானோர் இணையத்தில் முன்பதிவு செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. டிஸ்க்குடன் இருக்கும் ஸ்டார்ண்டர்டு பிளே ஸ்டேஷன் 5-ன் விலை ரூ.49,999, டிஜிட்டல் எடிசன் விலை ரூ. 39,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது வாடிக்கையாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டனர். தி கேம் ஷாப் மற்றும் குரோமோ ஆகிய தளங்களில் முன்பதிவு செய்ய முடியவில்லை குற்றம்சாட்டினர். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் கூட தங்களால் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்ததாக வருத்தத்துடன் கூறியிருந்தனர்.

சில தொழில்நுட்ப காரணங்களால் குரோமா மற்றும் பிளிப்கார், ரிலையன்ஸ் டிஜிட்டல் தளங்கள் சில ஆர்டர்களை தாங்களாகவே ரத்து செய்தனர். இந்த முறையும் அதே சிக்கல்கள் எழக்கூடாது என யூசர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்ட சோனி நிறுவனம் முன்பதிவு செய்பவர்களுக்கு ஜூலை 21 ஆம் தேதிக்குள் சோனி பிளேஸ்டேஷன் 5 கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. மற்ற இணையதளங்களில் முன்பதிவு செய்பவர்களுக்கும் இதே தேதியில் பிளே ஸ்டேஷன் டெலிவரி செய்யப்படலாம்.

கடந்த முறை குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே சில ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. தாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் டெலிவரி செய்யப்படுவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக சில வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். சோனி பிளேஸ்டேஷன் 5 வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் Shopatsc.com என்ற இணையதளத்தில் இப்போதே முன்பதிவுகளை செய்யலாம். சோனி சென்டரில் ஆர்டர் செய்பவர்களுக்கும் இலவச டெலிவரி கொடுக்கப்படுகிறது.

Also read... மொபைல் நெட்டை வாட்ஸ்அப் காலி செய்து விடுகிறதா? இந்த ட்ரிக்ஸ் பயன்படுத்துங்க...

வாட்ஸ் அப்பில் நோட்டிபிகேசன் தொல்லை தாங்கலையா... உங்களுக்குதான் இந்த பதிவு

அமேசான் தளத்தில் ஆர்டர் செய்பவர்களுக்கும் இலவச டெலிவரி கொடுக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஹெச்.டி.எப்.சி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்.பி.ஐ வங்கிகள் நோ-காஸ்ட் இ.எம்.ஐ வசதியை அறிமுகம் செய்துள்ளன. விஜய் சேல்ஸில் இமெயில் மற்றும் மொபைல் எண்ணைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் கேம்ஸ் தி ஷாப் ஆகிய தளங்களிலும் முன்பதிவு செய்ய முடியும். இதற்கு முன்பு ஜூன் 23 ஆம் தேதி சோனி பிளேஸ்டேஷன் 5 ரீ ஸ்டாக் செய்யப்பட்டிருந்தது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Sony